'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan E...
வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்
அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்.... படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள 'கேமரூன் ஏர்பார்க்' என்ற இந்த நகரம் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவின்படி, கார்களுக்குப் பதிலாக விமானங்கள் நிறைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி காட்சியளிக்கிறது.

வைரலாகும் வீடியோவில், வீடுகளுக்கு வெளியே சிறிய ரக விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த விமானங்கள் வெறும் பொருள்கள் அல்ல.
நகரத்தின் தெருக்கள் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக தெருவில் ஓட்டிச் சென்று, அங்கிருந்தே வானில் பறக்க முடிகிறது. தெருவின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரன்வே இதற்கு உதவியாக உள்ளது.
இந்த நகரத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள், வழக்கத்தை விட தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளன. விமானங்களின் இறக்கைகள் மீது மோதாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேமரூன் ஏர்பார்க் 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், இங்கு பணியில் இருக்கும் விமானிகளும் குடியேறத் தொடங்கினர். தற்போது விமானப் போக்குவரத்து மீது ஆர்வம் கொண்ட பலரும் இங்கு வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















