செய்திகள் :

Vijay Sethupathi: ``ஆக்ஷன் சினிமா மீது என் மகனுக்கு இருக்கும் ஈடுபாடு!" - விஜய் சேதுபதி பேச்சு

post image

ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடித்திருந்த பீனிக்ஸ்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தமிழில் திரைக்கு வந்திருந்தது.

பீனிக்ஸ் திரைப்படம்
பீனிக்ஸ் திரைப்படம்

இப்போது அப்படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் 7-ம் தேதி பீனிக்ஸ்' படத்தின் தெலுங்கு டப் வெர்ஷன் திரைக்கு வருகிறது. அதையொட்டிப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி பேசுகையில்,``நான் 'ஜவான்' படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொல்லி, "என் மகன் இதில் நடிக்கட்டும்" என்றார்.

நான் 'நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்' என்றேன். அதன் பிறகு நான் அதற்கு வரவில்லை. படத்தைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷமா இருந்தது.

இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம். சூர்யாவுக்கு சிறு வயதிலிருந்து ஆக்‌ஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் மாஸ் சினிமா ரொம்பப் பிடிக்கும்.

எப்போதும் என்னிடம், “டாடி, நீங்க இன்னும் அதிகமா மாஸ் படங்கள் செய்ய வேண்டும்!” எனச் சொல்வார்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

ஆக்ஷன் சினிமா மீது சூர்யாவுக்கு இருக்கும் ஈடுபாடு இப்போது 'பீனிக்ஸ்' படத்தின் அவருடைய கதாபாத்திரத்தில் தெரிகிறது.

இந்தக் கனவை நிஜமாக்கிய அனல் அரசு மாஸ்டருக்கும், தயாரிப்பாளர் ராஜலட்சுமி மேடத்திற்கும் என் நன்றி.

நான் இப்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படம் முடிவதற்கு தெளிவாக தெலுங்கு பேசுவதற்கு கற்றுக் கொள்வேன்.” என்றார்.

Selvaraghavan: ``யாருக்காகவும் அதை மாத்தக் கூடாது!" - மேடையில் பட அப்டேட் தந்த செல்வராகவன்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் அவருடன் ஷரதா ஶ்ரீநாத், செல்வராகவன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான... மேலும் பார்க்க

தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா - 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனமான (iifc), வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒ... மேலும் பார்க்க

கேரள மாநில விருது பெற்ற படங்களை எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்?

55-வது கேரள மாநில சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான நடுவர்கள் குழு இந்தாண்டுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். கட... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன் வாழ்த்து; வைரலாகும் ஸ்மிருதி மந்தனாவின் பேச்சு

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`ஜனநாயகன்' இயக்குநர் வினோத் பழனியில் சாமி தரிசனம்

‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் வினோத். தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்த... மேலும் பார்க்க

"விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா?" - பார்த்திபன் பதில்!

SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார். நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள்... மேலும் பார்க்க