செய்திகள் :

``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜெமிமா

post image

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.

அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட்டு முயற்சியால் முதல் உலகக் கோப்பை வசப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது சுனில் கவாஸ்கர் தனக்கு அளித்த வாக்குறுதியைச் சுட்டிக் காட்டி தான் ரெடியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜெமிமா
ஜெமிமா

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில் சேஸிங்கில் ஜெமிமா 40+ ஓவர்கள் அசராமல் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

அப்போது சுனில் கவாஸ்கர், ``இந்தியா உலகக் கோப்பையை வென்றால், அவருக்கு (ஜெமிமா) ஓகே என்றால் அவருடன் சேர்ந்து பாடுவேன். அவர் தனது கிட்டாரை எடுத்துக்கொள்ளட்டும், நான் பாடுகிறேன்.

ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாங்கள் இதைச் செய்திருக்கிறோம்.

எனவே, இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அதை மீண்டும் நான் நிகழ்த்த விரும்புகிறேன். அவருக்கும் அதில் மகிழ்ச்சி என்றால் நான் தயார்" என்று கூறியிருந்தார்.

இவ்வாறிருக்க இந்தியா உலகக் கோப்பையை வென்றுவிட்ட நிலையில் ஜெமிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவாஸ்கர் வாக்குறுதியளித்த வீடியோவையும், ஏற்கெனவே தாங்கள் இருவரும் இணைந்து பாடிய வீடியோவையும் பதிவிட்டு, ``ஹாய் சுனில் கவாஸ்கர் சார், உங்களுடைய மெசேஜை பார்த்தேன்.

இந்தியா வென்றால் இருவரும் இணைந்து பாடலாம் என்று கூறியிருந்தீர்கள். இப்போது கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கிறேன், நீங்கள் மைக்குடன் ரெடியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.

``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றா... மேலும் பார்க்க

'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' - கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்

முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதர... மேலும் பார்க்க

சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடு... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் வந்த பிரதிகா ராவலுக்கு மெடல் வழங்காதது ஏன்? ஐசிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் ம... மேலும் பார்க்க

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது.நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் த... மேலும் பார்க்க

`வரலாறு படைக்கப்பட்டுள்ளது' - ரஜினி முதல் விஜய் வரை பிரபலங்களின் வாழ்த்து

ICC Women's Cricket World Cup இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்றைய தினம் (நவம்பர் 2) 13வது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. நம் பெண்களின் வெற்றிக்கு நாடு முழுவதுமிருந்... மேலும் பார்க்க