``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
"பிரம்மயுகம் ஒரு மறக்க முடியாத பயணம்" - நெகிழ்ந்த மம்மூட்டி
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 2024, பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் பிரம்மயுகம். இந்த படத்துக்காக மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் அசத்தலான மேக்கிங்குக்காக திரையுலகில் பேசப்பட்ட திரைப்படம் பிரம்மயுகம். இதற்காக மம்மூட்டி தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கேரள மாநில திரைப்பட விருதுகளில் கிடைத்த அங்கீகாரத்துக்காக பிரம்மயுகம் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மம்மூட்டி.
விருது வென்ற சக திரைத்துறையினரை வாழ்த்தியவர், "ஷாம்லா ஹம்சா, ஆசிப், டோவினோ, சௌபின், சித்தார்த், ஜோதிர்மயி, லிஜோ மோல், தர்ஷனா, சிதம்பரம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ், பூகேன்வில்லியா, பிரேமலு படக்குழுவினர், கேரள மாநில விருதுகளை வென்ற அனைத்து படக்குழுக்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படி ஒரு மறக்கமுடியாத பயணத்தை எனக்கு பரிசளித்த பிரமயுகம் குழுவினருக்கு மிக்க நன்றி. கொடுமோன் பொட்டியை மிகுந்த அன்புடன் வரவேற்ற பார்வையாளர்களுக்கு இந்த அங்கீகாரத்தை சமர்ப்பணம் செய்கிறேன்." என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.















