செய்திகள் :

"விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா?" - பார்த்திபன் பதில்!

post image

SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்கக் கூடாது எனப் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், "முதல் நாள் முதல் காட்சியை வைத்துதான் ஒரு நடிகரின் சம்பளமே முடிவு செய்யப்படுகிறது. அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார்.

விஜய், அஜித்

அவர் சொன்னதில் எனக்கு மிக உடன்பாடான விஷயம் என்னவென்றால், என்னிடம் ஒரு தொகுப்பாளர் 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார். 'ஒருவருக்கு 5 வருடங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் நாம் 2.5 வருடத்திலேயே விமர்சிக்க அராம்பித்துவிடுகிறோம்.' என நான் பதிலளித்திருந்தேன்.

இதே போன்ற ஒரு கருத்தை அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். 5 வருடங்களை கொடுத்துவிட்டோம் என்றால், முழுமையாக ஆட்சி புரியட்டும். அதில் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் வரும் தேர்தலில் அதை நாம் காட்டலாம் அல்லது அன்பைக் காட்டலாம் என அவர் கூறியது பிடித்திருந்தது.

அவர் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, சீட்டை கிழிப்பது, அபிஷேகம் என்ற பெயரில் நடப்பது இதை எல்லாம் ஏன் கூறுகிறார் என்றால், கூட்ட நெரிசலால் நிகழ்ந்த இழப்புகளை மனதில் வைத்து இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என பேசி இருக்கிறார். எல்லாருடைய பார்வைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதேபோல் அவர் பார்வைக்கும் மரியாதை இருக்கிறது."

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

கரூர் சம்பவம்

அஜித் பேட்டியில் கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டும் காரணமில்லை எனப் பேசியிருந்தது குறித்தக் கேள்விக்கு, "விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது, நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அதன் உள் அர்த்தங்களை அரசியல் ஆக்காமல், 41 உயிர்கள் நமக்கு திரும்ப கிடைக்காது, எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது. எனவே மறுபடி அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த பதிலில் நான் புரிந்து கொள்ளும் விஷயம்." எனப் பதிலளித்தார்.

விஜய் நேரில் சென்று சந்திக்காதது குறித்துப் பேசும்போது, "நானாக இருந்தால் நேரில் சென்றிருப்பேன் என வீராவேசமாக சிந்திக்கிறோமேத் தவிர, நடைமுறையில் அது முடியுமா... இதுதான் சரி, அது தவறு என்று இல்லை. அவருக்கு அது சரி எனப்படுகிறது, அதை செய்கிறார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் வேண்டியது." என்றார்.

பெரிய பட்ஜெட்டில் புதிய பாதை

தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசிய அவர், "இப்போது நான் 'நான் தான் CM 2026 Onwards' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். அதை ஏப்ரல் தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டும். பவன் கல்யாணுடன் தெலுங்கில் ஒரு படம், மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒவ்வொரு படங்களில் நடித்திருக்கிறேன்.

என்னுடைய புதிய பாதை படத்தை மீண்டும் நானே இயக்கி நானே நடிக்கிறேன். அது என் கனவுப்படம். பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இனி மக்கள் விரும்புகிற மாதிரி படங்களை உருவாக்கப்போகிறேன்." எனப் பேசினார்.

Bison: ``எனக்குள் ஏதோ ஒன்றை" - பைசன் பட ஷூட்டிங்க் வீடியோவை பகிர்ந்து நெகிழும் நடிகை அனுபமா

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தில்... மேலும் பார்க்க

``சூரசம்ஹாரத்தை அனிமேஷன் படமாக எடுத்தால் என்ன?" - ரசிகரின் கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில்

ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அன... மேலும் பார்க்க

Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" - வாகீசன் பேட்டி

வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகி... மேலும் பார்க்க

``என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' - மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்த... மேலும் பார்க்க

``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.அப்படத்தின் வெற்றியைத்... மேலும் பார்க்க