`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்
"விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை" - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "விசாரணைக் குழு சம்மன்தான் கொடுக்க வந்தார்கள். சில ஆவணங்கள், விவரங்கள் கேட்டிருக்கிறார்கள். விசாரணைக் குழுவிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வழங்குவோம். சிசிடிவி காட்சிகள் மற்றும் பல ஆவணங்களை தருவோம். விசாரணைகள் இன்னும் எங்களிடம் நடைபெறவில்லை. பொதுவான ஆவணங்களையே திரட்டி வருகிறார்கள்" என்று பேட்டியளித்திருக்கிறார்.















