"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே அவருக்கு, ஹக்கீம் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அலாவுதீனின் சகோதரர் ஆரிஃப், அவரின் நண்பர் கௌதம் ஹக்கீமை திட்டி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஹக்கீம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரிஃப் மற்றும் கௌதமை கைது செய்தனர்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மேட்டுப்பாளையம் காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், “காரமடை நகராட்சியில் ரவிக்குமார் என்கிற திமுக கவுன்சிலர் உள்ளார். ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இளைய மகன் சரண்குமாருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவி உள்ளார். ரவிக்குமாருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடை இருந்துள்ளது. அங்கு வைத்து அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடைசியாக ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அலாவுதீன் மாயமாகியுள்ளார் என ஆரிஃப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவிக்குமார், அவரின் மூத்த மகன் மணிகண்டன், சரண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அலாவுதீன் – பூஜா இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் அலாவுதீனை அழைத்து 3 பேரும் இணைந்து கொலை செய்துள்ளனர்.


பிறகு மாதேஸ்வரன் மலைப் பகுதியில் அவரின் உடலை எரித்து தடயத்தை அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு துண்டுகளை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி ரவிக்குமார், சரண், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.” என்றனர்.

















