பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! ...
`அவரின் மகிழ்ச்சிதான் முக்கியம்’ - 15 ஆண்டு வாழ்ந்த மனைவியை காதலனுக்கு மணம் செய்து வைக்கும் கணவன்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது கணவரை காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு அடைத்து வைத்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இச்சம்பவம் ஏற்படுத்தியது.
தற்போது அதே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் அது போன்ற ஒரு சம்பவத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள கணவன் செய்த காரியம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மீரட் அருகில் உள்ள சருர்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் முஸ்தாக் ஷேக். கொத்தனார் வேலை பார்க்கும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ ஆரம்பித்தார். அத்தம்பதிக்கு பெண் வீட்டார் சிறிய அளவு நிலம் கொடுத்தனர். அந்த நிலத்தில் தம்பதிகள் வீடு கட்டி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன.
உறவினரால் உடைந்த உறவு
15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. முஸ்தாக் மனைவிக்கு புதிதாக தங்களது வீட்டிற்கு வந்த ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. முஸ்தாக் கிராமத்தில் இருந்து ஒருவர் இவர்களது வீட்டிற்கு வந்தார். அவர்களது வீட்டில் தங்கிக்கொண்டு வேலை செய்து வந்தார். ஆனால் முஸ்தாக் மனைவிக்கும், அந்த வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இது இது குறித்து முஸ்தாக் கூறுகையில், ''எனக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அவர்களது நட்பு தெரிய வந்தது. இது குறித்து எனது மனைவியிடம் கேட்டபோது அந்த நபரை மிகவும் விரும்புவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டார். இதனால் மனம் உடைந்து போனேன். ஆனால் எனது மனைவியின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மனதை மாற்றிக்கொள்ளும்படி கேட்டேன். ஆனால் அவர் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.
காதலை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன். நிறைவேறாத காதல் மிகுந்த வலியை கொடுக்கும் என்று எனக்கு தெரியும். எனது மனைவி வலியுடன் வாழ நான் விரும்பவில்லை. காதல் என்ற பெயரில் மக்கள் கொலை செய்கின்றனர். பிரேக்அப் ஏற்பட்டால் ஒருவர் தனது முன்னாள் பார்ட்னரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வதுதான் உண்மையான காதல். எனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாங்கள் ஒருவரும் முறைப்படி ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டோம். இரு குடும்பத்தினர், எனது குழந்தைகள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.
மற்றொரு டிரம் கொலையை விரும்பவில்லை
எனது குழந்தைகளுக்கு அனைத்தும் தெரியும். அம்மா மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று குழந்தைகள் கூறிவிட்டனர். எனது மனைவியை நான் இதயபூர்வமாக காதலிக்கிறேன். எனவே அவர் என்னுடன் இல்லாவிட்டாலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். மீரட்டில் மற்றொரு ஊதா டிரம் படுகொலையை நான் விரும்பவில்லை'' என்றார்.
அதோடு முஸ்தாக் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி அவரது காதலனை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவையும் கொடுத்து இருக்கிறார். இந்த மனுவை பார்த்தவுடன் போலீஸார் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். மூன்று பேரையும் அழைத்து பேசினர். இதில் முஸ்தாக் மனைவி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இப்போது முஸ்தாக்கும், அவரது மனைவியும் சேர்ந்து கட்டிய வீட்டில் முஸ்தாக் தொடர்ந்து வசித்துக்கொள்ள அவரது மனைவி ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். அந்த நிலம் முஸ்தாக் மனைவி பெயரில் இருக்கிறது. ஆனால் உள்ளூரில் யாரும் புதிய ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கின்றனர். எனவே டெல்லி சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.



















