செய்திகள் :

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

post image

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி,

முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன், கதிர் ஆனந்த்
துரைமுருகன், கதிர் ஆனந்த்

அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது.

இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.

"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை பா.ம.க, எம்.எல்.ஏ அருள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

லாலுவின் வீழ்ச்சியும் நிதிஷின் எழுச்சியும்!பீகாரில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அந்தக் கட்சியில் ஆதிக்க சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சர்ச்சை ... மேலும் பார்க்க

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report

பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழு... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க