செய்திகள் :

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

post image

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பாலியல் குற்ற சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது.

இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report

பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழு... மேலும் பார்க்க

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய... மேலும் பார்க்க

'பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது' - திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து... மேலும் பார்க்க

83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்... மேலும் பார்க்க