வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்
KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ!
KYV முடிக்காதவர்களுக்கு ஃபாஸ்ட் டேக் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தச் சிக்கல்களைக் களையும் விதமாக, ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை.
> இதுவரை வாகனங்களுக்கு KYV (Know Your Vehicle) நடைமுறையை முடிக்கவில்லை என்றால், ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்த முடியாது... அதன் செயல்பாடு நிறுத்தப்படும்.
ஆனால், இனி அப்படியில்லை KYV-ஐ முடிக்கவில்லை என்றாலும், ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டில் இருக்கும். அதை அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும்.

> KYV நடைமுறையின் போது, வாகனத்தின் பல கோண புகைப்படங்களை அப்லோடு செய்ய வேண்டும் என்பதில்லை. வாகனத்தின் நம்பர் பிளேட், ஃபாஸ்ட் டேக் தெரிவது போன்ற, வாகனத்தின் முன்பக்க போட்டோ மட்டும் அப்லோடு செய்தால் போதுமானது.
> இந்த நடைமுறை Vahan என்கிற தேசிய வாகன தரவுகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், KYV நடைமுறையின் போது, வாகனத்தின் எண், சேசிஸ் எண் அல்லது மொபைல் எண்ணை நிரப்பினாலே, தானாக ஆர்.சி வந்துவிடும். அதை சரிபார்த்தால் மட்டும் போதுமானது.
> ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், KYV நடைமுறையின் போது, குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
> KYV நடைமுறைக்கு முன்பு, ஃபாஸ்ட் டேக் பெற்றவர்கள் தொடர்ந்து அதே ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்தலாம். தவறாக பயன்படுத்தப்பட்டாலும், வங்கிகள் ஏதேனும் புகார்களைப் பெற்றாலும் தான், அந்த ஃபாஸ்ட் டேக் சேவை ரத்து செய்யப்படும்.
> KYV நடைமுறைகளில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், வங்கிகள் பயனாளர்களுக்கு இந்த நடைமுறைகளில் உதவலாம்.
> KYV முடிக்கவில்லை என்றாலும், உங்களது ஃபாஸ்ட் டேக்குகள் பயன்படுத்தப்படும் போது, உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ்கள் வரும்.






















