'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கர...
"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்றும் ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை என்றால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

அதில் வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண்ணின் புகைப்படங்கள் பல இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பதை ராகுல் காந்தி. சுட்டிக் காட்டியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஹரியானாவின் 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி எனப் பல பெயர்களில் அவரது புகைப்படங்களை வைத்து பல போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கின்றன.

இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் எப்படி பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் வந்திருக்கிறார். யார் அவர்?
இன்னொரு பெண்ணுக்கு 100 முறை வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. யார் வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வேறு மாநிலங்களில் இருந்து வந்தும் வாக்களிக்கக்கூட நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் பாஜகவினர்.
இந்த ஜனநாயகக் குற்றங்களை மறைக்கத்தான் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் நினைத்தால் ஒரு நொடியில் இந்த போலி வாக்காளர் அட்டைகளை நீக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து சதி செய்கிறது என்று குற்றம்சாட்டுகிறேன்.
वोट चोरी से हरियाणा में कांग्रेस की सरकार चोरी की गई है - और इसका ब्लैक एंड व्हाइट सबूत आपके सामने हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) November 5, 2025
- ब्राज़ील की एक मॉडल हरियाणा की वोटर लिस्ट में 10 बूथों पर 22 वोट - अलग-अलग नाम से
- एक ही फोटो के साथ 223 वोट एक बूथ में - नाम हर बार नया
- एक ही घर में 501 वोटर दर्ज - वो… pic.twitter.com/mCfNLc62P2
மென்பொருளைப் பயன்படுத்தி இவற்றையெல்லாம் கண்டறிய தேர்தல் ஆணையத்திடம் வலியுறித்தினோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதிலேயே இதற்குப் பின்னால் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது." என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.















