வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?
ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சுஜாதா.
அவர் வகுப்பில் இருந்த போது இரண்டு மாணவிகளை அழைத்துத் தனது கால் வலிக்கிறது என்று கூறி கால்களை மசாஜ் செய்துவிடும்படி உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் ஆசிரியையின் கால்களைப் பிடித்து பிடித்துவிட்டனர்.

ஆசிரியை தனது போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தனது காலைத் தூக்கி மற்றொரு இருக்கை மீது வைத்திருந்தார். அவரது காலை மைனர் மாணவிகள் பிடித்து விட்டனர். அந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "பணி நேரத்தில் வகுப்பில் கால்களை ஒழுங்கீனமாக வைத்திருந்தது மற்றும் போனில் பேசியது, மாணவிகளை சொந்த தேவைக்குப் பயன்படுத்தியது, பணியைச் செய்யாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் சுஜாதா இதே போன்று மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

















