தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில...
'எந்த ஃபைலை தேடி கொடநாடு சென்றார்கள்?' - எடப்பாடியை சாடிய டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று ( நவ.6) சென்னையில் கொடநாடு கொலை வழக்கு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
" கொடநாடு பங்களாவிற்கு சென்று வாட்ச்மேனை அடித்து உள்ளே சென்று என்ன ஃபைலை தேடினார்கள்.
அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது அதிமுக, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் அடங்கிய ஃபைல்கள் அனைத்தும் போயஸ் கார்டனில் தான் இருக்கும்.

துரோகத்தை நான் வீழ்த்தாமல் ஓயமாட்டேன்
அதில் அமைச்சர்கள் தொடர்பான நிறைய விஷயங்கள் இருக்கும். முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான கோப்புகளை நானே கிழித்தெறிந்திருக்கிறேன்.
அதேபோல அமைச்சர்கள் தொடர்பான ஃபைல்கள் கொடநாட்டிலும் இருப்பதாக யாரோ பயமுறுத்தி இருக்கிறார்கள்.
பாவம் அந்த ஃபைலை எடப்பாடி பழனிசாமி அங்கு சென்று தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.
கொடநாடு, கொலை சம்பவம் நடந்தபோது யார் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள்.
என்றைக்குமே டிடிவி தினகரன் எடப்பாடிக்கு சிம்ம சொப்பனம்தான். அவரின் துரோகத்தை நான் வீழ்த்தாமல் ஓயமாட்டேன்" என்று பேசியிருக்கிறார்.
















