"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?
Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

தொடர்ந்து அங்கேயே டயாலிசிஸ் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரத்தம் தேவைப்பட்ட நிலையில், கணவர் மூலமாக சேலம் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்று வரச் செய்துள்ளனர். கணவரும் அதற்கான தொகையைச் செலுத்தி ஒரு யூனிட் ரத்தத்தை மருத்துவர்களிடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ரத்தம் செலுத்தப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களில் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வருவதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில், அந்தப் பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
எச்.ஐ.வி பாதிப்பு காரணமாக 2023 ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட அலட்சியம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ரத்த வங்கியும் மாறி மாறி பொறுப்பைத் தட்டி கழித்து வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியேறிய கணவர், ஊட்டியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 22 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம், "சேலம் SPMM மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி ஆகிய இரு தரப்பினரும் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தம் வழங்கும் வங்கி, ரத்தம் வழங்குபவர்களின் ரத்தத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதேபோல, ரத்தத்தைச் செலுத்தும் மருத்துவமனையும் ரத்த வகை, ரத்தத்தில் உள்ள பிரச்னை போன்றவை குறித்து பரிசோதித்து இருக்க வேண்டும்.

இருதரப்பினரும் அஜாக்கிரதையாகச் செயல்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவேரி மருத்துவமனையில் செலவு செய்த 2 லட்சம், மேலும் இழப்பீட்டு தொகையாக 20 லட்சம் மற்றும் வழக்குக்குச் செலவுத் தொகை பத்தாயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் இரு தரப்பினரும் சேர்ந்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாதம் 9% வட்டியுடன் தொகை வழங்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















