UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்...
தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த யூ-டியூப் பிரபலமான நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.

”சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள்” என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கிமுத்துவின் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகிய 4 பேரும் முத்து மகேஷின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தனர்.
பின்னர், அவரை வெளியே அழைத்தனர். இதற்கு அவர் மறுத்ததால் வாசலில் நின்று கொண்டிருந்த முத்து மகேஷின் மனைவி பால அமுதாவை 4 பேரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது தலை, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது.

அவர் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார், ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















