UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்...
"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.
'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என இரு பெரும் அணியாகப் பிரிந்து நாடுமுழுவதும் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என 'INDIA' கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது.

இதற்கிடையில் பாமக, தவெக, அமமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணியை இன்னும் முடிவு செய்யாமல் தழும்பிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்து வருகின்றன.
இதில் சீமானின் 'நாதக' எப்போதும்போல தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் கூட்டணி குறித்து பேசியிருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "விஜயகாந்த் கூட்டணி அமைத்ததால் எதிர்க்கட்சியாக வந்தார் என்பது உண்மைதான். ஆனால், 10.5% வாக்கு வைத்திருந்தார். ஆனால், கூட்டணி வைத்ததால்தான் அவர் வாக்கு விழுக்காடு சீர்குலைந்தது.

கூட்டணி வைத்து அண்ணன் விஜயகாந்த் என்ன ஆனார் என்பதைப் பார்த்துவிட்டோம். அதனால் நாதக ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைக்காது. நாங்கள் மாற்றத்திற்கான அரசியலை செய்ய விரும்புகிறோம். ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றத்தை எப்படி கொண்டுவர முடியும்.
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் தேர்தலை சந்திக்கும். கூட்டணி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இது இப்போது கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் எதிர்காலத்தின் நல்ல அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார் சீமான்.













