மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட...
திருப்பூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தந்தை, இளைஞர் கைது
திருப்பூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவருக்கும் திருப்பூரில் தங்கி பிரிண்டிங் வேலை செய்து வரும் சேலத்தைச் சேர்ந்த இளவரசன் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அப்பெண் மூன்று மாதக் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், இளவரசன் திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதேபோல், அப்பெண்ணின் 47 வயதான தந்தையும் மதுபோதையில் பலமுறை அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பெண்ணின் தந்தையும் இளவரசனும் மீது போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



















