செய்திகள் :

2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு

post image

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவர் தனது இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்ய பதிவு அலுவலகத்தை நாடினார். ஆனால், அவரது இரண்டாவது திருமணத்தை அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து ஷெரீப்பும் அவரது இரண்டாவது மனைவி ஆபிதாவும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஷெரீப்புக்கு முதல் திருமணத்தின் மூலம் 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவதாகத் திருமணம் செய்த பெண்ணுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு மனைவியரின் குழந்தைகளுக்கும் தனது சொத்தில் சமபங்கு செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணத்தையும் பதிவுசெய்ய முயன்றதாகவும், இரண்டாவது திருமண பதிவிற்கு பதிவாளர் சம்மதிக்கவில்லை என்பதால் ஐகோர்ட்டை நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

கோர்ட்
கோர்ட்

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஷெரீப்பின் முதல் மனைவியைக் கட்சி சேர்க்கவில்லை எனவும். மனுதாரர்கள் திருமண பதிவாளரிடம் விண்ணப்பிக்கலாம். பதிவாளர் முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இரண்டாவது திருமணம் சட்டத்துக்கு புறமானது என முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால் பதிவாளர் பதிவு செய்யக்கூடாது. கணவர் இரண்டாவது திருமணம் செய்யும்போது கருத்துகூற முஸ்லிம் பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். இரண்டாவது திருமணத்துக்கு 99.99 பெண்கள் சம்மதிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரு முஸ்லிம் ஆணுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது. நாட்டின் அரசியலமைப்பு உரிமைகளைக் கருத்தில் கொள்ளும்போது மதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் அரசியலமைப்பு சம உரிமை வழங்குகிறது. திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்றால் முதல் மனைவியின் கருத்தை கேட்கவேண்டும். முதல் மனைவி இரண்டாவது திருமணத்தை எதிர்த்தால் அதை கோர்ட்டுக்கு கொண்டுவரலாம் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறையின் நடவடிக்கை சரியானதுதான் - PMLA உத்தரவு

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அம... மேலும் பார்க்க

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .இந்து சமய அறநிலையத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ச... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க

`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அ... மேலும் பார்க்க

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்... மேலும் பார்க்க

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவி... மேலும் பார்க்க