செய்திகள் :

Ghazala Hashmi: இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் முஸ்லிம் லெப்டினன்ட் கவர்னர்! - கஸாலா ஹாஷ்மி யார்?

post image

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General)ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர், (Abigail Spanberger), லெப்டினன்ட் கவர்னராக முஸ்லிம் பெண் கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியுள்ளனர்.

லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி
லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி

யார் இந்த கஸாலா ஹாஷ்மி?

அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கஸாலா ஹாஷ்மி.

1964 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஜியா ஹாஷ்மி மற்றும் தன்வீர் ஹாஷ்மிக்கு பிறந்தவர் கஸாலா ஹாஷ்மி. தனது குழந்தைப் பருவத்தை மலக்பேட்டில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார்.

இவரின் தந்தை அமெரிக்காவில் பணியாற்றி வந்ததால், 4 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் குடியேறியது கஸாலா ஹாஷ்மியின் குடும்பம்.

கஸாலா ஹாஷ்மியின் தந்தையான பேராசிரியர் ஜியா ஹாஷ்மி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அங்கு பல்கலைக்கழக ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.

லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி
லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி

சர்வதேச ஆய்வுகள் மையத்தை நிறுவி அதன் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கஸாலா ஹாஷ்மியின் தாயார் தன்வீர் ஹாஷ்மி, தெலங்கானாவின் உஸ்மானியா மகளிர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மற்றும் பி.எட். பட்டம் பெற்றுள்ளார்.

கல்வியில் மிகவும் சிறந்த மாணவியாக இருந்த கஸாலா ஹாஷ்மி, ஜார்ஜியா தெற்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாலிடிக்டோரியனாக (Valedictorian) தேர்வு செய்யப்பட்ட இவர், பல உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் மூலம் தனது கல்விக் காலத்தைக் கடந்தார்.

கல்வியைத் தொடர்ந்து ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரெனால்ட்ஸ் சமூகக் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1991 ஆம் ஆண்டு கஸாலா ஹாஷ்மி தனது கணவர் அசார் ரஃபீக்குடன் ரிச்மண்ட் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதியருக்கு யாஸ்மின் மற்றும் நூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

அரசியல் அனுபவமே இல்லாத கஸாலா ஹாஷ்மி, 2019 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி
லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி

அதன் பலனாக, 2024 ஆம் ஆண்டு செனட் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவி, குழந்தைப் பேறு உரிமை மற்றும் பொதுக் கல்விக்கான உரிமை ஆகிய இரண்டு முக்கியமான ஜனநாயக முன்னுரிமைகளை உள்ளடக்கிய முக்கிய தலைமைப் பதவியாகும்.

இதுதவிர, தனது பதவிக்காலத்தில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் வர்ஜீனியாவின் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இந்த தேர்தலின் முடிவில், ஆளும் குடியரசுக் கட்சியிடம் இருந்த மாநில செனட் பதவியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றினார்.

இவரின் இந்த அபூர்வமான வளர்ச்சி, ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக கஸாலா ஹாஷ்மி தொடர்ந்து குரல் கொடுத்ததுதான் இந்த வெற்றிக்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் உரக்கப் பேசுகின்றன.

``ஸ்டாலின் தலைமறைவாக இருந்தது உண்மைதான்; ஆனால்'' - களத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர் விளக்கம்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடந்திருந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர், 'கலைஞர் கைது செய்யப்பட்ட போது அவரது மகன் ஸ்டாலின் தலைமறைவாக இருந... மேலும் பார்க்க

US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அமெரிக... மேலும் பார்க்க

``ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி,"ராகுல் காந்தி மிக முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில், ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் தேர்தல் ஆணை... மேலும் பார்க்க