செய்திகள் :

``ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

post image

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி,

"ராகுல் காந்தி மிக முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில், ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் தேர்தல் ஆணையம் ஆட்சித் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எண்ணிக்கை அடிப்படையில் 12.5 சதவீத வாக்குகள் போலியான வாக்காளர் பதிவுகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 8 ஓட்டுக்கு 1 ஓட்டு திருட்டு ஓட்டாக அமைந்துள்ளது.

புகைப்படங்கள் தவறாக வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளன. அதேபோல், தவறான முகவரிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, லட்சக்கணக்கான வாக்காளர்கள் ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நீக்கப்பட்டுள்ளனர்.

இரட்டை பதிவுகள்

மேலும், சில லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக, ஒரே நபர் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை நீக்குவதற்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் மூலம் ஆதார் இணைப்புகளைப் பயன்படுத்தி சரிசெய்ய முடியும்.

ஆனால், ஹரியானா வாக்காளர் பட்டியலில் தேர்தலுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை பதிவுகளை நீக்குவதற்கான மென்பொருளை பயன்படுத்த மறுத்தது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

வாக்காளர் பட்டியலில் ஊழல் நடந்தால் தான் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடியும் என்பதால் தான் தேர்தல் ஆணையம் இரட்டை பதிவுகளை நீக்குவதற்கான மென்பொருளை பயன்படுத்தவில்லை.

அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், ஹரியானா மாநிலத்தின் ராய் சட்டமன்றத் தொகுதியில், சோனிபட் பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் மாடலின் புகைப்படம் 22 இடங்களில், வெவ்வேறு முகவரிகளுடன் வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்

ஹரியானா மாநிலத்தில், ராகுல் காந்தியின் உத்தரவுப்படி காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சில வாக்காளர்கள் பூஜ்ஜிய முகவரியுடன் பட்டியலில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கமளிக்கும் போது, வீடில்லாதவர்கள் பூஜ்ஜியம் முகவரியில் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

ஹரியானா மாநிலத்தில், சில பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீட்டு முகவரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர்.

அதிலும் சில பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் வசிப்பதாகக் கூறப்பட்ட வாக்காளர்கள், ஹரியானாவிலும் உத்தரப் பிரதேசத்திலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

மனிதத் தவறுகள் நடந்தால் சில பதிவுகள் மட்டுமே அவ்வாறு அமையலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக 25 லட்சம் வாக்காளர்களை இவ்வாறு வாக்காளர் பட்டியலில் இணைத்தது, தேர்தல் ஆணையத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு முறைகேடில் ஈடுபட்டதற்கான சான்றாகும் என்கிறேன்.

மொத்தமாக 1.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வெவ்வேறு புகைப்படங்களுடன் வாக்காளர் பட்டியலில் உள்ளன. பூஜ்ஜியம் முகவரியில் 93 ஆயிரம் வாக்காளர்கள் ஒரே இடத்தில் பதிவாகியுள்ளனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கர்நாடகா

இதேபோல் கர்நாடகா மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருந்ததை காங்கிரஸ் கட்சி முன்பு தெரிவித்தது. 3.5 சதவீத வாக்காளர்கள் நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்களித்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக திட்டமிட்டு இதேபோன்ற முறைகேடுகள் வாக்காளர் பட்டியலில் நிகழ்ந்துள்ளன.

கரூர்

தமிழகத்தைப் பொறுத்தவரை, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அஞ்சூர் ஊராட்சி வாக்காளர் பட்டியலை, 06.01.2025 அன்று தமிழக தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிட்டுள்ளது.

இது கரூர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, புதிய இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம்
தமிழக மாநில தேர்தல் ஆணையம்

ஹரியானா

இதேபோல ஹரியானா மாநிலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திருத்தப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியல் இருந்தது.

ஆனால், அதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்தாமல், நீக்கம்–சேர்த்தல் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது.

ஆட்சித் திருட்டில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டது என்பதற்கே இதுவே போதுமான ஆதாரம். ஏனெனில், வெறும் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

மொத்தத்தில், வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

தமிழகத்தில் SIR

தமிழகத்தில் “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR)” என்ற பெயரில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் முறையை மாற்றி, வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது.

இந்தப் போராட்டம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்கான யுத்தம். எதிர்காலத்தில் வாக்களிக்கக் கூடிய இளைஞர்களின் உரிமையை காக்கும் இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் விழிப்புடன் இருந்து, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்." என்றார்.

“இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அனைவரும் ஏன் வீதியில் இறங்கி போராடக் கூடாது?” என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.

US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அமெரிக... மேலும் பார்க்க

மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

மாநில அரசுகள் இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அல்லது மீண்டும் ஆட்சிக்கு வர புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. அதாவது, பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சி... மேலும் பார்க்க

``திமுக கூட்டணியில் திருமாவளவன் ஏன் இருக்கிறார்? அவர்களிடம் சமூகநீதியே இல்லை’’ - அன்புமணி

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க