``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?
எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்சி அதிகரிப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே (American Time Use Survey) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்விற்காக 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உணவு உண்பது, விளையாடுவது, பயணம் செய்வது, படிப்பது, நிதி மேலாண்மை செய்வது போன்ற 80-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செயல்களை மக்கள் தனியாகவும், நண்பர்களுடனும் செய்யும்போது அவர்களின் மகிழ்ச்சி அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, சமையலறை மற்றும் உணவு தொடர்பான தூய்மைப் பணிகளை தனியாக செய்வதை விட மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்சி குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.
இது தவிர மற்ற அனைத்து செயல்களிலும் மற்றவர்களின் துணை மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு நமது அன்றாட வாழ்வில் சிறிய சமூகத் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம், நமது மகிழ்ச்சியை மேம்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

















