``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
Thalaivar 173: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - சுந்தர் சி காம்போ; கமல் தயாரிப்பில் ரஜினி
ரஜினி தற்போது `ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி தற்போது பம்பரமாய் சுற்றி வருகிறார்.

`ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
ரஜினியின் 173-வது படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டன.
தற்போது ரஜினியின் 173-வது படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம் உருவாகவிருக்கிறது.
ரஜினியின் அன்பு நண்பரான கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறது.
28 வருடங்களுக்கு முன்பு ரஜினியை வைத்து 'அருணாச்சலம்' படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி.
28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியோடு இணைகிறார் என்டர்டெயினிங் இயக்குநர் சுந்தர் சி!

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கும் கமல்ஹாசன், "காற்றாய் அலைந்த நம்மை தனதாக்கியது.
இரு பனிப் பாறைகள் உருகி வழிந்த இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் அலையாய் மாறுவோம். நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம், மகிழ்வோம்!
வாழ்க நாம் பிறந்த கலைமண்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
2027-ம் ஆண்டு பொங்கலுக்குப் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

















