BB Tamil 9: `ஆட்டத்தை ஆரம்பித்த பழைய போட்டியாளர்கள்’ - மீண்டும் கலவரம் ஆகும் பிக...
Gouri Kishan: ``எனக்கு ஹிட் கிடைச்சு சில நாட்கள் ஆகிடுச்சுதான்" - மனம் திறக்கும் கெளரி கிஷன்
அறிமுக படத்திலேயே நடிகர்களுக்கு ப்ரேக் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், அதை தன்னுடைய முதல் படத்திலேயே சாத்தியப்படுத்திக் காட்டியவர் கெளரி கிஷன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி, துணை நடிகை என 360 டிகிரியில் சுற்றி வருவதுதான் கெளரி கிஷனின் தனித்துவம்.

இவருடைய அடுத்த தமிழ் ரிலீஸான 'அதர்ஸ்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
இந்தப் பேட்டியில் '96 -2', 'LIK' எனப் ப்ரஷான அப்டேட்களையும் நம்மிடையே அவர் பகிர்ந்திருக்கிறார்.
நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்தது.
இந்தப் படத்தை என்டர்டெயினிங்காக சினிமாக்கான விஷயங்களைச் சேர்த்து இயக்குநர் எடுத்திருக்காரு. ஏன்னா, இந்த மாதிரியான மெடிக்கல் த்ரில்லர் சில நேரம் ஆவணப்படம் மாதிரி ஆகிடும்.
ஆனா, எங்க இயக்குநர் சரியாக அனைத்தையும் பேலன்ஸ் செய்திருக்கார். எனக்கு இந்த ஜானர்ல வந்திருக்கிற 'கிரேஸ் அனாடமி' சீரிஸ் ரொம்பவே பிடிக்கும்.
எங்க தாத்தாவும் டாக்டர்ங்கிறதுனால எனக்கு மருத்துவத் துறையும் ரொம்ப க்ளோஸ்." என்றவரிடம், சுயாதீன சினிமா, பெரிய பட்ஜெட் சினிமா, சிறிய பட்ஜெட் என அனைத்திலும் உங்களைப் பார்க்க முடிகிறது. உங்களின் திட்டம் என்னவாக இருக்கிறது?" எனக் கேட்டதற்கு, "எனக்கே தெரியல (சிரிக்கிறார்) அவியல் மாதிரிதான் அது!

எனக்கு முதல் படத்திலேயே பெரிய ப்ரேக் கிடைச்சது. பிறகு விஜய் சார்கூட நடிச்சேன். கொரோனா சமயத்துல என்கிட்ட காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் ஒரு மியூசிக் வீடியோவுக்காக கேட்டாங்க.
அதனுடைய ஐடியா எனக்குப் பிடிச்சிருந்தது. அதைச் செய்தேன். மறுபடியும் ஒரு பெரிய படத்துல நடிச்சிருப்பேன். திடீர்னு ஒரு சின்ன படத்துலயும் நடிப்பேன்.
வெவ்வேறு பாதைகள்ல பயணிக்கணும்னுதான் நான் ஆசைபடுறேன். அப்படி என்னை நான் தொடர்ந்து சப்ரைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
ஆறு மாதம் வீட்ல சும்மா இருந்தாலும் நான் ஸ்ட்ரெஸ் ஆகமாட்டேன். உண்மையை சொல்லணும்னா, எனக்கு ஹிட் கிடைச்சு சில நாட்கள் ஆகிடுச்சுதான்." என்றார்.
``'96 - 2'-க்கு ரொம்ப எதிர்பார்த்து காத்திட்டு இருக்கேன். அந்தப் படத்துக்கு பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது. படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணும்போதே ஏன் சார், அது கல்ட் திரைப்படம்னு சொன்னேன்.
என்னைக் கேட்டால் நான் அதை தொட வேண்டாம்னுதான் சொல்வேன். ஆனா, அது ப்ரேம்குமார் சாருடைய விஷன். சமீபத்திய பேட்டியிலகூட அவர் எழுதிய கதைகள்ல இதுதான் சிறந்ததுனும் சொல்லியிருக்காரு.

'96', 'மெய்யழகன்' மாதிரியான அற்புதமான படங்களுக்குப் பிறகு அவர் இந்த விஷயத்தைச் சொன்னது என்னை அந்தப் படத்துக்கு ஆவலோடு எதிர்பார்த்து வெயிட் பண்ண வைக்குது." என்றவர், " 'மெய்யழகன்'தான் என்னை சமீபத்துல அழுக வச்ச திரைப்படம்.
தியேட்டர்ல இருந்தே ப்ரேம்குமார் சாருக்கு நான் கால் பண்ணி பேசிட்டேன். ப்ரேம் சார் ரைட்டிங், கார்த்திக் சார் - அரவிந்த் சாமி சார் காம்போ எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதுவும் க்ளைமேக்ஸ்ல பெயர் தெரியாமல் தவிக்கும் சீன் இருக்கே, யப்பா!" என்றார்.
" 'LIK'-விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். படம் எப்படி வந்திருக்கிறது?" என்றதும், "'LIK' திரைப்படம் விக்னேஷ் சிவன் சாருடைய கனவு. அந்தப் படத்தினுடைய கதையை எழுதிடலாம்.
ஆனா, அதை படமாக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதை இளம் நடிகர்களை வச்சு சாத்தியப்படுத்தி இருக்காரு. நான் சில காட்சிகள் பார்த்தேன்.

இந்திய சினிமா மாதிரியே இல்ல. வேற லெவல்ல வந்திருக்கு. இதுவரைக்கும் நான் செய்த கதாபாத்திரங்கள்ல இருந்து அது வேறுபட்டது.
விக்னேஷ் சிவன் சாருமே 'உன்னை புதுசாக காண்பிக்கிறேன்'னு சொன்னாரு. அதனுடைய ரிலீஸுக்கு ஆவலோடு காத்திருக்கேன்." எனப் புன்னகையோடு முடித்துக் கொண்டார்.
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


















