செய்திகள் :

சதுரகிரியில் ஐப்பசி பௌர்ணமி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

post image

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சதுரகிரி கோயில்
சதுரகிரி

இந்த கோயிலில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால், இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.

மேலும், இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புவதால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்.

தற்போது சதுரகிரி கோயிலுக்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அதிகாலை முதலே பக்தர்கள் மலையடிவாரப் பகுதியில் குவிந்தனர்.

சதுரகிரி கோயில்
சதுரகிரி

பின்னர் காலை 6 மணிக்கு கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்து சிவன் கோயிலில் தங்கக் காசு புதையல் - `ஷாக்’ ஆன ஜவ்வாதுமலை கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்குஉட்பட்ட ஜவ்வாதுமலை கோவிலூர் பகுதியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உ... மேலும் பார்க்க

சகல துக்க நிவாரணியான சண்டி ஹோமம்: ஏன் செய்ய வேண்டும்?புராணமும் வரலாறும் கூறும் பரிகார விளக்கங்கள்!

சகல துக்க நிவாரணியான சண்டி ஹோமம்! ஏன் செய்ய வேண்டும்!புராணமும் வரலாறும் கூறும் பரிகார விளக்கங்கள்! தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் சங்க... மேலும் பார்க்க

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் - 2025 | Photo Album

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாம... மேலும் பார்க்க

சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்

சகல சங்கடங்களையும் தீர்க்கும் சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்! தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் சண்டி ஹோமம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இருமுடி சமர்ப்பணம் முதல் பதினெட்டாம்படி தரிசனம் வரை | Photos

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன? மேலும் பார்க்க

சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலைய... மேலும் பார்க்க