Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani?
நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், "இவருக்கு வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும்" என்று எச்சரித்தும், 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
34 வயது ஆகும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர்.
மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
நியூயார்க் நகரத்தில் மேயராக பதவியேற்கும் முதல் முஸ்லீம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்கிற குணப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார்.
முன்னெடுத்த பிரசாரங்கள்:
நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில் அவர் முன்னெடுத்த முக்கிய பிரசாரங்கள்:
> இன வேறுபாட்டுக்கு எதிரான மாற்றம்
> பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றம்
> இலவச குழந்தைகள் நலன்
> அரசு நடத்தும் மளிகை கடைகள்
> இலவச பேருந்து சேவை
> போலீஸாரிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை

சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன?
ஜோஹ்ரான் மம்தானி அறிவித்த இலவசங்களுக்கு நிதி எங்கு இருந்து வரும் என்று பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டிரம்ப் அவரை கம்யூனிஸ்ட் எனவும், தீவிர அச்சுறுத்தல்பாடாகவும் நேரடியாகச் சாடியுள்ளார்.
இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சுயநிர்ணய வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர்.
ஆண்ட்ரூ கியூமோவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் டிரம்ப், மேலும் இவருக்கு பெருமளவு நிதியுதவி செய்தார் உலகத்தின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்.
வெற்றி பேச்சு
தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஜோஹ்ரான் மம்தானி, "அரசியலில் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நீங்கள் உதவியுள்ளீர்கள்.
இப்போதுள்ள அரசியல் இருளில், நியூயார்க் நகரம் வெளிச்சமாக இருக்கும்" என்று பேசியுள்ளார்.
நியூயார்க் வெற்றி ஏன் முக்கியம்?
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் நியூயார்க். ட்ரம்ப் பிறந்த நகரமும் இது. இந்த நகரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கையைத் தாண்டி, ட்ரம்ப் கட்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிக முக்கியமானது.
இது அந்த நகரத்தின் மக்களுக்கு ட்ரம்பின் மீதுள்ள அதிருப்தியை காட்டுகிறது என்றும் கருதலாம்.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ஜோஹ்ரான் மம்தானி வெற்றிக்கு பிறகு, ட்ரம்ப், "இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் உள்ளன - ஒன்று, டொனல்ட் ட்ரம்ப் என்கிற பெயர் பலோட்டில் இல்லை. மற்றொன்று, இப்போது அமெரிக்காவில் அரசு நிர்வாகம் மூடப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.













