தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறு...
'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?
கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று.
ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது.
எவ்வளவு நிராகரிப்புகள்?
கடந்த ஆகஸ்ட் மாதம், 74 சதவிகித இந்தியர்களின் கல்வி விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது கனடா அரசு. இந்த சதவிகிதம் கடந்த ஆண்டைவிட, இரண்டு மடங்கு தாண்டியது.

கடந்த ஆகஸ்ட் மாதம், கிட்டத்தட்ட 4,500 இந்தியர்கள் கனடா நாட்டின் கல்வி விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,200 விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு அரசு பல நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பங்களை நிராகரித்து இருந்தாலும், இந்தியர்களின் கல்வி விசா தான் பெருமளவு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கெடுபிடி ஏன்?
2023-ம் ஆண்டு, கனடா அரசு இந்தியாவில் இருந்து வந்த 1,500 போலி கல்வி விசா விண்ணப்பங்களைக் கண்டுபிடித்ததன் விளைவே இந்தியர்களுக்கு இந்தக் கெடுபிடி.
போலி ஆவணங்களைக் கொடுத்து பல இந்தியர்கள் கல்வி விசாவைப் பெற்றிருக்கின்றனர். நிரந்தர குடியுரிமை சோதனையின்போது, இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனால்தான், தற்போது, இந்தியர்களின் நிதி இருப்பு முதல் கல்வி ஆவணங்கள் வரை மிகவும் கவனமாக ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வே கிட்டத்தட்ட விசா நேர்காணலைப் போல நடத்தி வருகிறது கனடா அரசு.
உஷாராக வேண்டியது அவசியம்!
உலக அளவிலேயே, கனடா கல்வி விசா நிராகரிப்பு விகிதம் 40 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில், இந்தியாவிற்கு மட்டும் 74 சதவிகிதம்.
கனடா நாட்டின் இந்த நகர்வு... இனி வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்தியர்கள் கனடாவைத் தாண்டி, வேறு நாட்டைத் தேடுவது அவசியமாகிறது என்பதை புரிய வைக்கிறது.












