Sudha Athmaraj, ``இவங்க கடவுள் கொடுத்த குழந்தைகள்!'' | Arvind Foundation | Anand...
டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புது ரூல்; 'இதை' இப்போவே செஞ்சுடுங்க! |How to
டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்.
என்ன செய்ய வேண்டும்?
டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாஹன் மற்றும் சாரதி வலைதளங்களில் தங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணை அப்டேட் செய்வது நல்லது.
இது விரைவில் அவசியமாக்கப்படலாம். அதனால், நீங்கள் இப்போதே செய்துவிடுவது சிறந்தது.

ஏன் செய்ய வேண்டும்?
மொபைல் எண்ணை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வலைதளங்கள் மற்றும் அரசு தரவுகளில் உங்களுடைய மற்றும் உங்களுடைய வாகனம் பற்றிய முழுமையான, சரியான மற்றும் அப்டேட்டட் தகவல்கள் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்யும்.
மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?
Vahan மற்றும் Sarathi ஆகிய வலைதளங்களுக்குள் அல்லது ஆப்களுக்குள் செல்லவும்.
இந்த வலைதளங்கள் அல்லது ஆப்களுக்குள் சென்றதுமே, 'Update Mobile Number' என்கிற டேப் வரும்.
அதை க்ளிக் செய்து, உங்களுடைய வாகனத்தின் பதிவு எண், சேசிஸ் எண், இன்ஜீன் எண், பதிவு தேதி, பதிவு அல்லது ஃபிட்னஸ் தேதியின் கடைசி தேதி ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவும்.
அடுத்ததாக, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் Captcha-ஐ நிரப்பி 'Validate'-ஐ க்ளிக் செய்யவும்.
பின், லைசன்ஸ் எண், மொபைல் எண் மற்றும் OTP-ஐ நிரப்பி அப்டேட் செய்யவும்.
வலைதளத்திலோ, ஆப்களிலோ செய்ய இயலாதவர்கள், முடியாதவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம்.
Driving license holders and vehicle owners are advised to update their mobile numbers on the Vahan and Sarathi portals to ensure their details are complete, accurate and updated.
— MORTHINDIA (@MORTHIndia) November 2, 2025
Visit: https://t.co/RfD59GRnSmhttps://t.co/KqKiXIJJEr#Parivahan#DigitalIndia… pic.twitter.com/N9ETatnyLl


















