செய்திகள் :

ரோடு முதல் சோசியல் மீடியா வரை மோதிகொள்ளும் Audi, BMW - உண்மையில் எது சூப்பர் பிராண்ட்?

post image

ஆடி, பி.எம்.டபிள்யூ - இது இரண்டுமே ஜெர்மன் ஆடம்பர் கார் பிராண்டுகள். இந்த இரு பிராண்டுகளும் எப்போதும் தீப்பிடிக்க மோதி கொண்டாலும், ரொம்ப சேஃப்பான வாகனங்கள்.

இந்த இரு பிராண்டுகளின் யுத்தம் வாகனங்களோட மட்டும் நின்றுவிடுவதில்லை, விளம்பர பலகைகள் தொடங்கி சோசியல் மீடியாக்கள் வரை நீண்டுகொண்டே வருகிறது. அந்தச் சுவாரஸ்யங்களைத் தான் சொல்கிறது இந்தக் கட்டுரை...

Audi
Audi

Audiயும், Quattro AWDயும்

Audi-யின் சிறப்பம்சமே ‘Quattro All-wheel Drive’ தான். அதாவது AWD-களில் இரு சக்கரங்களுக்கு மட்டுமே பவர் செல்லும். ஆனால், Quattro AWD-யிலோ நான்கு சக்கரங்களுக்குமே பவர் செல்லும். இதனால், மழை, பனி, நெடுஞ்சாலை, ஆஃப் ரோடு என எல்லாவற்றிலுமே ஸ்மூத்தான பயணம் கிடைக்கிறது.

நவீன தோற்றம், ஸ்டைலிஷ் ஆன டிசைன்.... அது மட்டுமல்லாமல், எரிபொருள் செலவும் ஆடி கார்களில் சற்று குறைவு தான். ஆனால் முக்கிய, அடிப்படை அம்சங்களுடன் விற்கக்கூடிய Audi கார்களைவிட பிரீமியம் பிளஸ் ஆடி கார்களில் தான் Audi-யின் ஒரு சூப்பர் ஃபீலே கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது.

BMW = அட்வென்சர்

இப்போது பி.எம்.டபிள்யூவிற்கு வருவோம். இந்தக் கார்களில் ஸ்டீயரிங் பக்கத்தில் இருந்தாலே ஒரு தனி ஃபீல். காரை வளைக்கும் போதே அட்வென்சரஸ் ஃபீல் கிடைக்கிறது. M மற்றும் i மாடல்களில் உள்ள ஹை பெர்ஃபாமென்ஸ் இன்ஜின், காரை வேகமாக ஓட வைக்க உதவுகிறது.

ஆனால், சில மாடல்களில் சஸ்பென்ஷன் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மெயின்டனன்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விலை, எரிபொருள் செலவும் என எல்லாமே சற்று காஸ்ட்லி தான். குறிப்பாக Manual M3 போன்ற மாடல்களில் கியர் பாக்ஸ் அதிகம் வெப்பமடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

BMW
BMW

முன்னிலையில் யார்?

2025-ம் ஆண்டின் முதல் பாதியில் பி.எம்.டபிள்யூ, அமெரிக்காவில் 1,78,499 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. இது ஆடி கார்களின் விற்பனைகளில் இரண்டு மடங்கு அதிகம்.

அதாவது, இந்த ஆண்டு ஆடியின்யின் அமெரிக்க விற்பனை 81,951 ஆகும். அமெரிக்காவில் மட்டுமல்ல, ஜெர்மனியிலும் பி.எம்.டபிள்யூ முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவிலும் 2025-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூவே விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, பி.எம்.டபிள்யூx1 மாடல் இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செக் மேட் வைத்த BMW

2009-ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு பில் போர்டு வார் நடந்தது. முதலில் ஆடி தனது A4 காருக்காக விளம்பரத்திற்கு, அந்தக் காரின் போட்டோவை போட்டு, 'Your move, BMW' என்று பலகை வைத்தது.

அதற்கு பி.எம்.டபிள்யூ, தன் M3 கார் புகைப்படம் போட்ட விளம்பர பலகையில் 'Checkmate' என்று பதில் அளித்திருந்தது.

ஆனால், அப்போதும் ஆடி விடவில்லை. தங்களது 'R8 Super Car'-ஐ காட்டி 'Your pawn is no match for our king' என்று மீண்டும் விளம்பர பலகை மூலம் பி.எம்.டபிள்யூவை வம்பிழுத்தது.

இதற்கு பி.எம்.டபிள்யூ தங்களது 'Formula 1' கார் படம் போட்ட Airship-ஐ ஆடியின் விளம்பரப் பலகையின் மேலேயே பறக்க விட்டு அசத்தலான நகர்வைக் கொடுத்தது.

Your move, BMW - விளம்பரம்
Your move, BMW - விளம்பரம்

எக்ஸில் பிராண்ட் வார்

இந்த இரு பிராண்டுகளின் சண்டை விளம்பர பலகைகளுடனும் நின்றுவிடவில்லை. 2018-ம் ஆண்டில் அப்போதைய ட்விட்டர், இப்போதைய எக்ஸிலும் இந்த யுத்தம் தொடர்ந்தது.

பி.எம்.டபிள்யூ ஒரு விளம்பரத்தில் அவர்களது காரின் பின்னால் சில ஃபயர் ஒர்க்ஸ் இருப்பது போல காட்டியிருப்பார்கள். அந்த விளம்பரத்தில் எதர்ச்சையாக ஆடி காரின் சின்னத்தின் வளையங்கள் போன்று இருந்தது.

இந்த விளம்பரத்தை ஆடி 'When you see it' என்று குறிப்பிட்டு பி.எம்.டபிள்யூவை ட்ரோல் செய்திருந்தது. இதற்கு பி.எம்.டபிள்யூ அசால்டாக 'We see it, where we usually do... in the rear view mirror' என்று சூப்பர் பதிலடியைத் தந்தது. இதன் பொருள், பி.எம்.டபிள்யூவின் கண்ணாடி மூலம் பார்த்தால் தான் பின்னால் இருக்கும் ஆடி தெரியும்'.

இந்த மோதல் எல்லாம் இருக்கட்டும்... உண்மையில் எது டாப் என்ற கேள்வி எழுகிறதா?

ஆடம்பரத்திற்கு ஆடி கார்கள் நல்ல சாய்ஸ். அனைத்து வானிலைகளில் ஆடி கார்கள் நன்கு உழைக்கும்.

மற்றபடி அட்வென்சர்ஸ் டிரைவிங்.. ஸ்போர்ட்டி ஃபீல்... போன்றவைகளுக்கு BMW தான் பெஸ்ட். அதனால், இரண்டில் எது பெஸ்ட் என்று கூற முடியாது, இரண்டுமே அதனதன் விதத்தில் பெஸ்ட்.

தீபாவளி டைம்: தாறுமாறாகக் குறைந்த கார் விலை; BMW டு சுசூகி எவ்வளவு குறைந்துள்ளது?|பக்கா கணக்கு இதோ!

லதா ரகுநாதன்பலரின் நீண்ட நாள் கனவாக ஒன்று இருக்கிறது. அது என்ன கொஞ்சம் யோசியுங்கள்.வெரி சிம்பிள், சொந்த காரில் மனைவி, குழந்தைகளோடு ஒரு நீண்ட சூப்பர் பயணம்.'அந்தக் கனவை நனவாக்கச் சரியான நேரம் இதுவா?' எ... மேலும் பார்க்க

நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்... கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்... உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற... மேலும் பார்க்க