செய்திகள் :

"அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும்" - தவெக ராஜ்மோகன் பேட்டி

post image

தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதலும், மன்னிப்பும் தெரிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் தவெக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்க்க தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுமதிக்கவில்லை. நான்கூட திருச்சி ரோட்டில் இருக்கும் ஒரு தங்கும்விடுதியில்தான் தனிப்பட்ட முறையில் தங்கியிருந்தேன்.

ராஜ்மோகன்

இந்த விவகாரத்தில் எங்கள் சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் என இரண்டு வழிகள் இருந்தன. நாங்கள் சட்டப்போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறோம். அமைதியான முறையில் நீதிக்காகக் காத்திருக்கிறோம். அமைதியாக இருந்தால் அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம். தவெக தலைவர் விஜய்யும் 'நீதி வெல்லும்' எனச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்துப் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், "ராஜ்மோகன், தவெக நிர்வாகிகள் எல்லாம் தலைமறைவாக இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லையே தவிர, தலைமறைவாக இல்லை" என்று பேசியிருக்கிறார்.

"கே.என்.நேரு, சகோதரர்களின் 'JOB RACKET’ ; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிற... மேலும் பார்க்க

`நகராட்சி பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழலா?’ - அமைச்சர் கே.என் நேரு சொன்ன விளக்கம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமல... மேலும் பார்க்க

பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" - தமிழிசை கேள்வி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்... மேலும் பார்க்க

கேரளாவிலும் 'SIR' : ``இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்... மேலும் பார்க்க

தென்காசி: முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா? - மேலகரம் பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? - முழு பின்னணி

சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக குடியிருப்பு கட்டுமானங்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருந... மேலும் பார்க்க