செய்திகள் :

Chennai Hunter Nights Ride - மறக்க முடியாத ஒரு ஹன்ட்டர் 350 ரைடு; மறக்க முடியாத அனுபவம்

post image

சென்னை அடையாரில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவன ஸ்டோரிலிருந்து இந்த ரைடு ஆரம்பமானது. மாலையில் Hi-Tea மற்றும் Snacks உடன் எல்லோரும் சேர்ந்து, சிரிப்பு, உரையாடல், புது முகங்கள் - சந்தோஷமான தொடக்கம். ராயல் என்ஃபீல்டு டீம் ரைடர்களை சிம்பிளாகவும், உற்சாகமாகவும் வரவேற்றது.


அதுக்கப்புறம் இன்ஜின் ஸ்டார்ட்!

எல்லோரும் சேர்ந்து ECR ஸ்பீட்வே நோக்கி ஹன்ட்டர் 350-ஐ ஓட்டியபடி கிளம்பினோம். சென்னையின் இரவு சாலைகள், விளக்குகள், சற்றே குறைந்துபோன டிராஃபிக் - அந்த ரைட் அனுபவமே வேறு மாதிரி இருந்தது. ஹன்ட்டரின் அந்த exhaust சவுண்ட், ரோட்டில் ஓடும் அந்த லைனே ஒரு திரில்!

RE Adyar Showroom
Hunter Nights Ride
Go-Karting

ECR ஸ்பீட்வேயை அடைந்ததும் அடுத்த சுவாரஸ்யம் - Go Karting!

ஹெல்மெட்டுடன் அனைவரும ட்ராக்கில் ரெடி! அந்த சில நிமிடங்கள் வேகம், திருப்பம், போட்டி, உற்சாகம் – எல்லாம் கலந்த ஒரு அலாதியான அனுபவம். ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணும் சிரிப்பு சத்தம், முழுக்க எனர்ஜிதான்!

அதன்பிறகு ரைடு தொடர்ந்தது ECR-ல் உள்ள Delhi Dhaba நோக்கி...

ஹைவே ரைடு என்றால் எப்போதும் ஒரு வித்தியாசமான அமைதி இருக்கும் இல்லையா? இரவில அந்த குளிர்ந்த காற்று, வளைந்த சாலைகள், குழுவாக ஓடும் ரைடர்கள் - அப்படியே ஒரு Cinematic feel. Delhi Dhaba-வில் ஒரு சூப்பரான டின்னர் இடைவேளையுடன் எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தோம்.

Delhi Dhaba, ECR
Hunter Rider
RE Hunter 350
Group Pic

சிலருக்கு இது முதல் ரைடு, சிலர் ரெகுலர் ரைடர்ஸ் - ஆனால் எல்லாருக்கும் பொதுவானது அந்த brotherhood feel தான். இந்த மாதிரி ரைடுகள்தான் நம்ம சென்னையை ஒரு புதிய பார்வையில் பார்க்க வைக்கிறது. ஒவ்வொரு Hunter பைக்கும் ஒரு கதையைச் சொல்வதாக இருந்தது அந்த இரவு, அந்த ரைடு, அந்த பங்கேற்பு - எல்லாம் சேர்ந்து ஒரு மனநிறைவைக் கொடுத்தது. இது ஒரு நிகழ்ச்சி மட்டும் இல்ல, ஒரு ரைடிங் கம்யூனிட்டியின் உணர்வுப்பூர்வமான பயணம்!

டாப் 5 மிக குறைந்த விலை, அதிக மைலேஜ் பைக்குகள்!| Top 5 Affordable Commuter Bikes!

வரும் தீபாவளிக்குள் அல்லது புது வருடத்திற்குள் ஒரு புதிய பைக் வாங்கணும், ஆனால் பட்ஜெட்டுக்குள் இருக்கணுமா?GST வரி மாற்றத்துக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சில பிரபல கம்யூட்டர் பைக்குகளின் விலை இன்னும் ... மேலும் பார்க்க