நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் (இந்தியா- பாகிஸ்தான்) தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.

நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரைத் தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள்.
பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர் ரொம்பக் கெடுபிடியானவரும்கூட. `போரை நாங்கள் தொடர்வோம்' என்றார்.
நான் மோடியிடம், `நீங்கள் போரைத் தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை' என்றேன்.
பின்னர் பாகிஸ்தான் அரசிடமும் அதையே சொன்னேன். பின்னர் அவர்களே என்னை அழைத்து போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.
நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறேன். எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது.
எங்களுக்குள் நல் உறவும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும் சிறந்த போராளி தான் ” என்று பேசியிருக்கிறார்.
















