செய்திகள் :

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மூன்றாவது முறையாக "ஐகானிக் பிராண்டு ஆஃப் தி இயர்” விருதை பெற்றுள்ளது!

post image

1964 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தூய்மை, நம்பிக்கை மற்றும் சிறந்ததன்மைக்கு இணையான பெயராக விளங்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், ET Edge & The Times Group முன்முயற்சியோடு, ET NOW-ல், 2025 செப்டம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட, இந்தியாவின் ஐகானிக் பிராண்ட்ஸ் 2025 விருதில் மூன்றாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த மதிப்புமிக்க பாராட்டு, ஒரே ஒரு ஜிஆர்டி ஷோரூமில் தொடங்கப்பட்ட பயணம், தற்போது தென்னிந்தியா முழுவதும் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒன்று என 66 ஷோரூம்களாக வளர்ந்த ஒரு வளர்ச்சியை கொண்டாடியது; இது ஆறு தசாப்தங்களாக - கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கைக்கான ஜிஆர்டியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

பல ஆண்டுகளாக, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நகை விற்பனையில் தனது வணிகத்தைத் தாண்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க தன்னைத்தானே மறுவரையறை செய்துள்ளது. இந்த பிராண்டு ஹோஸ்பிட்டாலிட்டி மற்றும் கல்வித் துறை போன்ற துறைகளில் கால் தடம் பாதித்துள்ளது; வணிக நுண்ணறிவும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட அபூர்வமான சேர்க்கையை இது வெளிப்படுத்தியுள்ளது.

நகைத் துறையில், இது தொடர்ந்து தொழில்துறை தரநிலைகளாக மாறிய அளவுகோல்களை நிர்ணயித்து வருகிறது, ஹால்மார்க்-சான்றளிக்கப்பட்ட கலெக்ஷன்கள் மற்றும் வாடிக்கையாளர் முதன்மை கொள்கைகளும் அதன் முன்னோடி மனப்பான்மைக்கு சான்றாக நிற்கின்றன.

GRT Live வாயிலாக பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் தடையின்றி இணைத்து, எல்லைகளை கடந்து, உலகளாவிய வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நெறிமுறைகளை - தொலைதூர வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்துகிறது.

புதுமையைத் தழுவிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜிஆர்டியில் உள்ள ஃபாரா கான் பிரத்தியேக வைர கலெக்ஷன், இதன் உயர்ந்த கலைத்திறனும் கைவினை நுணுக்கமும், இந்நிறுவனத்தின் தொடர்ந்த தேடலுக்கான சான்றாகும். தங்களது படைப்பிற்க்காக இந்நிறுவனம் கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது, உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தனக்கான எல்லையில் - உலகளாவிய தரத்தில் செயல்படும் ஒரு திறனை வெளிப்படுத்துகிறது.

சமூகத்திற்குத் திருப்பி வழங்குவைத்து என்னும் நோக்கம் கொண்டுள்ள இந்த் நிறுவனத்தின் உறுதியும் அதே அளவில் முக்கியமானது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், பல்வேறு சுகாதாரத் திட்டங்கள், சமூக முயற்சிகள் மற்றும் பல இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு பெருந்தன்மையான CSR பங்களிப்புகள் மூலம் இதை வெளிப்படுத்தியுள்ளது.

GRT Jewellers

"வணிகமும் சமூக ஆதரவும் ஒன்றோடொன்று இணைந்தவை" என்ற அதன் தத்துவத்தை ஜிஆர்டியின் முன்முயற்சிகள் வலுப்படுத்துகின்றன. நிலைத்த வெற்றியென்பது பொருளாதார வலிமையில் மட்டுமல்ல, அதிகாரமளித்தல் மற்றும் பகிரப்பட்ட செழிப்பையும் சார்ந்துள்ளது என்பதை ஜிஆர்டி நிரூபித்துள்ளது.

தென்னிந்தியா முழுவதும் மற்றும் சிங்கப்பூரிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மற்றும் வலுவான நிலைப்பாடும் காரணமாக, இந்த நிறுவனம் இலட்சக்கணக்கான நுகர்வோரின் நம்பிக்கையையும் ஆதர்வையும் பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலைத்த முத்திரையைப் பதித்த முன்னணி ஐய்கானிக் பிராண்டுகளில் ஒன்றாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸையும் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த பெருமையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன், அவர்கள் கூறியதாவது: “எப்போதும் எங்கள் பயணம் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கள் ஒவ்வொரு ஜிஆர்டி கிளைகளும் வெறும் கற்களும் சுவர்களால் கட்டி

எழுப்பப்படவில்லை; எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தான் அவை பிரதிபலிக்கிறது. ET NOW நடுவர் மன்றத்தின் வாயிலாக இந்த அங்கீகாரம் ஒரு வழிகாட்டும் வெளிச்சமாக அமைந்துள்ளது, இது எங்கள் வளர்ச்சியை நேர்மை மற்றும் புதுமையுடன் தொடரவும், வாடிக்கையாளர் சேவையை மிக உயர்ந்த தரத்துடன் தொடரவும் எங்களுக்கு ஊக்குவிக்கிறது.

இந்த கௌரவத்திற்காக நடுவர் குழுவுக்கும், மற்றும் குழுமத்திற்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். இந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி. ஆர். ராதாகிருஷ்ணன், அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த கௌரவத்தை எங்களுக்கு சாத்தியமாக்கிய எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் நாங்கள் உருவாக்கும் தங்கம் மற்றும் வைரங்கள் முதல் பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் வரை, ஒவ்வொரு கலெக்ஷன்களும் தூய்மை, நம்பிக்கை, கைவினைத்திறன், அழகு மற்றும் பாரம்பரியத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நகையும் நம்பிக்கை, பெருமை மற்றும் சொந்தத் தன்மை ஆகியவற்றின் கதையைச் சொல்லும் துறையை நாங்கள் தொடர்ந்து வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - காரணம் என்ன? இப்போது தங்கம் வாங்கலாமா?

சில நாள்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்தது. வெள்ளியும் சின்ன உயர்வைக் கண்டிருக்கிறது.ஏன் திடீர் உயர்வு என்கிற கேள்வி, இப்போது பலருக்கும் எழுந்திருக்கும்.இந்த ... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.1,080 `உயர்வு’ - மீண்டும் ஏறிய தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.135-உம், பவுனுக்கு ரூ.1,080-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.நேற்று, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்த ந... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.3,000 குறைந்த தங்கத்தின் விலை - காரணம் என்ன? இன்னும் குறையுமா?

இந்த மாத இறுதிக்குள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடுமோ என்கிற எண்ணம் இருந்து வந்தது. அதற்கு முற்றிலும் மாறாக கடந்த 18-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்துவருகிறது. கூடவே, வெள்ளியும் ஏறி... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.1,200 குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிர... மேலும் பார்க்க

Gold Rate: தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,450 ஆகும். தங்கம் | ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

GOLDதங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.100 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.11,500 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன... மேலும் பார்க்க