செய்திகள் :

பவுனுக்கு ரூ.3,000 குறைந்த தங்கத்தின் விலை - காரணம் என்ன? இன்னும் குறையுமா?

post image

இந்த மாத இறுதிக்குள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடுமோ என்கிற எண்ணம் இருந்து வந்தது. அதற்கு முற்றிலும் மாறாக கடந்த 18-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்துவருகிறது.

கூடவே, வெள்ளியும் ஏறிய வேகத்திலேயே, மளமளவென இறங்கிவிட்டது.

பவுனுக்கு ரூ.97,000-த்தைத் தாண்டி சென்ற தங்கத்தின் விலை, இப்போது பவுனுக்கு ரூ.88,600 ஆக விற்பனையாகி வருகிறது. இன்று காலை, இப்போது என தங்கம் விலை மாறி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்துள்ளது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.207 வரை சென்றது. இன்று அதன் விலையோ ரூ.165.

தங்கம்
தங்கம்
'ஏன் இந்த திடீர் விலை குறைவு?' என்கிற கேள்வி நிச்சயம் எழும். அதற்கு சர்வதேச அளவில் நடந்துவரும் முக்கிய மாற்றங்கள்தான் காரணம்.

இதுவரை வீழ்ச்சி கண்டுவந்த அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது பலமடையத் தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வந்த போர்களும், இப்போது முடிவை எட்டிவிட்டது அல்லது மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துவருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூடுதல் 100 சதவிகித வரி விதிப்பிற்கு பிறகு, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் மூளும் என்று கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தப் பிரச்னைகளைக் களைந்து இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

தங்கம் விலை பெரிய உச்சங்களைத் தொட்டுவிட்டதால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து பிராஃபிட் புக்கிங் செய்து வருகின்றனர்.

அமெரிக்க டாலர் வலுவடையத் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தில் இருந்து மாற்றுகின்றனர்.

இன்னும் தங்கம் விலை குறையுமா?

இதற்கான பதில் சர்வதேச சூழல்களைப் பொறுத்தே அமையும்.

உலக நாடுகளுக்கு இடையே இணக்கம் இருந்துவந்து, வர்த்தகங்களும் சுமுகமாக நடந்து வந்தால், தங்கம் விலை அதிகம் ஏறாது.

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைய வேண்டும்.

தங்கம்
தங்கம்
இதில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உண்டு...

இந்த வாரம், அமெரிக்காவின் பணவீக்க அறிக்கை வெளியாகவுள்ளது.

அடுத்தது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்கா பல நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்தக் காரணிகளைப் பொறுத்தும் தங்கம் விலை உயருமா... குறையுமா என்பது தெரிய வரும்.

பவுனுக்கு ரூ.1,200 குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிர... மேலும் பார்க்க

Gold Rate: தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,450 ஆகும். தங்கம் | ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

GOLDதங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.100 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.11,500 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன... மேலும் பார்க்க

Gold Rate: கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40-ம், ஒரு பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,540 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு பவ... மேலும் பார்க்க

மூன்றாவது நாளாக இறங்குமுகம்; இன்று தங்கத்தின் விலை எவ்வளவு?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,500-க்கு விற்... மேலும் பார்க்க

தங்கம் விலை 'இவ்வளவு' குறைஞ்சுடுச்சா? - இன்றைய தங்கம், விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-ம், பவுனுக்கு ரூ.2,400-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,700-க்கு விற்பனை ஆகி வருகிறது.தங்கம்இன்று ஒர... மேலும் பார்க்க