நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
கரூர் சம்பவம்: உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு; ஆறுதல் சொன்ன விஜய்
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல்படுத்தினார். அதோடு, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசியபோது, "விரைவில் உங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வேன்" என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, த.வெ.க நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கரூர் அல்லது நாமக்கல்லில் உள்ள ஏதாவது ஒரு மண்டபத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விஜய் ஆறுதல் சொல்லும் நிகழ்வை நடத்த முயன்றனர்.
ஆனால், மண்டப உரிமையாளர்கள் தங்கள் மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொள்ளவில்லை என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஆம்னி பேருந்தில் அழைத்து வரச்சொல்லி விஜய் சந்தித்தார். அப்போது, பலரது காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், "கடைசி வரைக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வேன்" என்று உருக்கமாகப் பேசி நம்பிக்கை வார்த்தைகள் கூறியதாகத் தெரிகிறது.
தவிர, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்யப்பட்ட ஆவணத்தையும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தப்பட்ட ஆவணங்களையும், உயிரிழந்தோரின் உறவினர்களிடம் விஜய் வழங்கியுள்ளார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு செய்து தருவதாக உறுதியாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், த.வெ.க தலைவர் விஜய் வழங்கிய மருத்துவக் காப்பீட்டு ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.





















