நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை
டாடா அறக்கட்டளையில் தற்போது பிரச்னை ஒன்று பெரிதாக வெடித்துள்ளது.
டாடா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக மெஹ்லி மிஸ்திரி இருந்து வந்தார். அவருடைய பதவி இன்றுடன் முடிவடைகிறது. இவரது பதவி நீட்டிக்கப்படுவதில் மேற்கொண்ட வாக்கெடுப்பில்தான் பிரச்னை வெடித்துள்ளது.
மெஹ்லி மிஸ்திரியின் பதவி நீட்டிப்பிற்கு எதிராக நோயல் டாடா, வேணு சீனிவாசன், விஜய் சிங் ஆகியோர் வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக் குழுவில் மீதம் இருக்கும் இருவர் இவரது பதவி நீட்டிப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலத்தை நீட்டிக்காதது அந்த நிறுவனத்திற்குள் குழப்பத்தைக் கிளப்பலாம்.

நீதிமன்றத்தை நாடலாம்...
மேலும், மெஹ்லி தனது பதவி நீட்டிப்பிற்காக நீதிமன்றத்தை நாடும் வாய்ப்புகளும் அதிகம்.
இதற்குக் காரணம், "தற்போது அறங்காவலராக இருப்பவர்களின் பதவிக்காலம் முடிந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு அவர்களது அடுத்த பதவிக்காலம் வாழ்நாள் முழுவதுமானதாக மாற்றப்படும்" என்று கடந்த ஆண்டு டாடா அறக்கட்டளையில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்.
ஏன் இது பிரச்னை?
ஒருவேளை மெஹ்லி மிஸ்திரி நீதிமன்றத்தை நாடினால், அது டாடா குழுமத்தில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கலாம். அந்தக் குழுமத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.





















