நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
BB Tamil 9: "ஒரிஜினல் கேம் எது? ஃபேக் கேம் எது?" - வைல்டு கார்டு என்ட்ரியில் நடிகை சாண்ட்ரா
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய திருப்பமாக பிரஜின் - சாண்ட்ரா இருவரையும் வைல்டு கார்டு மூலம் களமிறக்கவுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்த சீசனிலும் வைல்டு கார்டு எண்ட்ரியை அறிமுகப்படுத்த உள்ளனர்.

அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகரான பிரஜின் மற்றும் அவரது மனைவி சான்ட்ரா ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர். பிரஜின் மற்றும் சான்ட்ரா இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். சின்னத்திரையில் பிரபலமானவர்கள்.
இதற்கு முன் பிக் பாஸ் சீசன் 2-ல் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஜோடியாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கணவன் - மனைவி ஜோடியாக பிரஜின் மற்றும் சான்ட்ரா நுழையவிருப்பது நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தற்போது வெளியான புரொமோவின்படி, ”கேம் விளையாடுறேன் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சிலரை வைத்து கேம் ஆடுகிறார்கள். இதில் ஒரிஜினல் கேம் எது? ஃபேக் கேம் எது? என்று வெளிக்கொண்டு வர வேண்டாமா? இந்த டிராமாவுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறேன்” என்று சான்ட்ரா பேசியிருக்கிறார்.




















