தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK |Montha Cyclone E...
BB Tamil 9: 'யாருக்கும் மரியாதை கொடுக்கத் தெரியல' - பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுக்கும் பிரஜின்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி செல்லவிருக்கின்றனர் என்று கூறப்பட்டது.
தற்போது பிரஜின் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் புரொமோவில் பிரஜின் பேசுகிறார். "நான் பிரஜின்வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறேன்.

இந்த வீட்டில் யாருக்குமே மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. நாவடக்கம் இல்லை. இது எல்லாத்தையும் தனிதனியாக சரி செய்யப்போகிறேன். பைனல் வார்னிங்" என பேசியிருக்கிறார்.





















