தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK |Montha Cyclone E...
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து, திருச்சியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பெருக்கும் நோக்கில் 'ரன் ஃபார் ஹோப்' மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
2 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ ஓட்டங்களில் 1000 அதிகமான பேர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை பி.ஹெச்.இ.எல் நிர்வாக இயக்குநர் திரு. பிரபாகர் தலைமை விருந்தினராக துவக்கி வைத்தார்.

பி.ஹெச்.இ.எல் பொது மேலாளர் திரு. ரவி மற்றும் சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மொத்தமாக ₹40,000 பரிசுத்தொகையுடன், பி.ஹெச்.இ.எல் சமுதாயத்திலிருந்து 1000 அதிகமான பேர் கலந்து கொண்ட மாரத்தான் சிறப்பாக நடைபெற்றது.


















