தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK |Montha Cyclone E...
Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது.
விலா எலும்பில் ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிபட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பிசிசிஐ மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று (அக்.28) செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
" ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிந்த உடனேயே அவருக்கு செல்போனில் அழைத்தேன். ஆனால் அவரிடம் செல்போன் இல்லை.
பந்தை பிடிக்கப்போகும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஸ்ரேயஸ் ஐயரின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
அடிப்பட்ட போது எங்களின் பிசியோ கமலேஷ் ஜெய்ன், ஸ்ரேயாஸ் ஐயருடன் இருப்பது தெரிய வந்தது.
ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.
கடந்த 2 நாட்களாகவே ஸ்ரேயஸ் ஐயருடன் பேசுகிறோம். அவரால் எங்களுக்கு பதில் அளிக்க முடிகிறது. செல்போனில் பேச முடிகிறது.
ஸ்ரேயஸ் ஐயருடன் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரேயஸ் இருக்க வேண்டும்.
அவர் அனைவருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லை.
ஸ்ரேயஸ் ஐயர் கேட்ச் பிடித்த போது சாதாரணமாகவே இருந்தார். வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை.
அவர் ஓய்வறைக்கு வந்த பின்னரே, ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்பது தெரிய வந்தது.
பின்னர் மருத்துவரிடம் கொண்டு சென்ற போதும் ஸ்ரேயஸ் ஐயர் சாதாரணமாகவே பேசி இருக்கிறார்.
ஸ்ரேயஸ் ஐயர் கீழே விழுந்தப் போதே காயம் ஏற்பட்டிருக்கிறது ஆனால் அந்த சமயத்தில் எங்களுக்கு அது தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.


















