செய்திகள் :

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" - ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

post image

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் குழு அவரை இங்கிலாந்து தொடரில் இணைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை.

கருண் நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கருண் நாயர் 205 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யவில்லை. அவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சேர்க்காதது குறித்து கேட்கப்பட்டபோது, "அவரிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம்" எனப் பதிலளித்தார் அஜித் அகர்கார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 26) நடந்த கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கருண் நாயர் கர்நாடகா அணிக்காக 174* ரன்கள் அடித்து மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளார்.

கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்

"நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம்" - Karun Nair

பின்னர் பேசிய அவர், இந்திய தேர்வுக்குழுவின் முடிவு தனக்கு ஏமாற்றமளித்ததாகப் பேசினார். "என்னுடைய கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ஒரு தொடரை விட சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்... தற்போது சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் அடித்து மக்களின் கருத்துக்களில் இடம்பெற வேண்டும்." என்றார்.

தொழில்முறை கிரிக்கெட்டில் அவரது அடுத்த இலக்கு பற்றி கேட்கப்பட்டபோது, "அடுத்த இலக்கா... உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம். அதைச் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வெற்றிகளைப் பெற வேண்டும்." என்றார்.

பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிற... மேலும் பார்க்க

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன.ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'விலா எலும்பில் தசை கிழிவு' - ஸ்ரேயஸ் உடல்நிலை எப்படியிருக்கிறது? பிசிசிஐ அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துணைக் ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ்... மேலும் பார்க்க

"என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது"- இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே

இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். குறிப்பாக, 2020- 2021... மேலும் பார்க்க