அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில்...
வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.6 லட்சம்; சம்பளமாக வந்த லஞ்சம்; அரசு அதிகாரியின் மனைவி சிக்கியது எப்படி?
ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக இருப்பவர் பிரத்யூமன் தீட்ஷித். இவரது மனைவி பூனம். தீட்ஷித் மனைவி இரண்டு ஆண்டுகள் இரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓரின்ப்ரோ சொலிஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் போன்ற கம்பெனிகளில் 2019-20ம் ஆண்டுகளில் பூனம் வேலை செய்ததாகக் கூறி அந்த இரண்டு கம்பெனிகளும் பூனம் வங்கிக்கணக்கில் ரூ.37.54 லட்சத்தை வரவு வைத்திருக்கின்றன. ஆனால் பூனம் அந்த கம்பெனிக்கு வேலைக்குச் செல்லவில்லை.
மாறாக அந்த கம்பெனி தீட்ஷித் மூலம் அரசு துறைகளில் டெண்டர் பெற்று இருக்கிறது. அரசு டெண்டர் வழங்க தீட்ஷித் லஞ்சமாக வாங்காமல் அந்தப் பணத்தைத் தனது மனைவி அவர்களது கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறி சம்பளம் என்ற பெயரில் லஞ்சத்தை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. விசாரணையில் பூனம் சம்பந்தப்பட்ட இரண்டு கம்பெனிக்கும் சென்றது கூட கிடையாது என்றும், அக்கம்பெனி எங்கு இருக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தங்களது கம்பெனியில் வேலை செய்தார் என்று கூறி இரு கம்பெனிகளும் பூனமின் 5 வங்கிக்கணக்குகளில் ரூ. 37.54 லட்சத்தை அனுப்பி இருக்கிறது. அதுவும் பூனம் ஒரே நேரத்தில் இரண்டு கம்பெனிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டி இருக்கின்றனர்.
தனது மனைவி அக்கம்பெனிகளில் வேலை செய்தார் என்பதைக் காட்ட அட்டெண்டென்சில் தீட்ஷித் கையெழுத்து போட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் தனது மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் ரூபாய் சம்பளம் என்று குறிப்பிட்டு வரும் வகையில் தீட்ஷித் ஏற்பாடு செய்துள்ளார். அந்த லஞ்ச பணத்திற்காக ராஜஸ்தான் அரசுக்குச் சொந்தமான ராஜ்காம் என்ற நிறுவனம் மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் டெண்டர் கொடுத்து இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















