செய்திகள் :

``AI அமைச்சரின் 83 குழந்தைகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்வார்கள்'' - அல்பேனியா பிரதமர் அதிரடி

post image

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது.

ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது.

அல்பேனிய பிரதமர் எடி ராமா
`AI அமைச்சர் டயல்லா' குறித்து அல்பேனிய பிரதமர் எடி ராமா

தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் (Global dialogue) மாநாட்டில் அறிவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நாடாளுமன்ற உறுப்பினார்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு “குழந்தையும்” ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனிப்பட்ட உதவியாளராக செயல்பட்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை பதிவு செய்வது, அமர்வுகளின் சுருக்கங்களை வழங்குவது, விவாதங்களின் போது பதில்கள் பரிந்துரைப்பது போன்றவற்றில் உதவும் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்தை ஒரு பெரிய சவால் என்று குறிப்பிட்ட அந்நாட்டின் பிரதமர் கூறுகையில், “முதல் முறையாக டயல்லா 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

ஒவ்வொரு “குழந்தையும்” சோசியலிஸ்ட் கட்சி எம். பி களுக்கு உதவியாளராக இருப்பர். நாடாளுமன்ற நடப்புகளை பதிவு செய்வது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிந்துரைகளும் வழங்குவர்” இக்குழந்தைகளுக்கு அவர்களின் தாயாரைப் போன்ற அறிவு இருக்கும்.

AI அமைச்சர் டயல்லா
AI அமைச்சர் டயல்லா

எடுத்துக்காட்டாக, நீங்கள் காப்பி குடிக்க சென்றுவிட்டு வேலைக்குத் திரும்ப மறந்துவிட்டால், நீங்கள் இல்லாதபோது நடந்த விஷயங்களை இந்த குழந்தை சொல்வதோடு மட்டுமில்லாமல் நீங்கள் யாருக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கூறும் ” என்கிறார்.

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு, இந்த ஏ.ஐ. அமைச்சகம் முழுமையாகச் செயல்பட இருக்கிறது. இத்திட்டம் 2026-க்குள் நிறைவுபெற்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி... மேலும் பார்க்க

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்க... மேலும் பார்க்க

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' - கருணாஸ் பேட்டி

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்

மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். சீமா... மேலும் பார்க்க

கரூர்: 'ஏன் நேரில் வரவில்லை?'- விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்

கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கி... மேலும் பார்க்க