அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில்...
``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' - கருணாஸ் பேட்டி
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் குறித்துப் பேசியிருக்கும் கருணாஸ், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடிகர்களாக இருந்து புகழ்பெற்று அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
மக்களுக்காக நின்று மக்களுக்காகப் பணி செய்துதான் அமைச்சராக, முதலமைச்சராக மக்களை ஆள முடியும். ஆனால், மக்களுக்குப் பிரச்னை என அந்த இடத்திலேயே நிற்காமல் ஓடி ஒளிந்துகொள்வது எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

மக்கள் பிரச்னைகளை மக்களுடன் நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் என்பதுதான் என் கருத்து.
இதைவிட பெரிய கூட்டங்களை, பிரச்னைகளை, மாநாடுகளை கையாண்டவர் விஜயகாந்த். மக்களுக்காக களத்தில் இறங்கி நிற்பவன்தான் தலைவன். சினிமாவில் மட்டும் இறங்கி சண்டைபோடுபவன் தலைவனாகமுடியாது. தலைவனாகக்கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று பேசியிருக்கிறார் கருணாஸ்.
















