புத்தரி அறுவடைத் திருவிழா: கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடிய பழங்குடிகள்! | ...
``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்
மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.
"கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யை பார்க்க செல்கிறார்கள் இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்க நெறிமுறைகளை கற்றுத்தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையைப் போற்றலாம், கலைஞர்களைப் பாராட்டலாம். ஆனால் நடித்தால் மட்டுமே நாடாளும் தகுதி வந்துவிடும் என்று நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு.
போகப்போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்றுதான் பார்க்கிறோம். ஒப்பனையை அளித்த உடனே அரியணையும் அளிக்கிறோம்.
நடிக்கும்போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பதை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா?

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், திரை கவர்ச்சியில் மூழ்கியிருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்" என்றார்.
சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்ததால் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு காவல்துறை கூறியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
















