அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில்...
ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்
கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் எடுத்த லாட்டரியில் 100 மில்லியன் தினார் கிடைத்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் அனில் குமாரின் வாழ்க்கை ஒரு நாள் இரவில் அடியோடு மாறிவிட்டது. லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்வது என்பது குறித்து அனில் குமார் தனது கனவுகளை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''நான் வென்ற லாட்டரி சீட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனத்துடன் செயல்படுவேன். லாட்டரி சீட்டில் எனது தாயாரின் பிறந்த மாதமான 11 கடைசியில் வரும் வகையில் தேர்வு செய்தேன்.

எனவே லாட்டரி சீட்டில் உள்ள கடைசி இரண்டு நம்பர்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இந்த லாட்டரியில் கிடைத்த பரிசை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன். லாட்டரியில் எனக்கு பரிசு கிடைத்த அன்று நான் சோபாவில் அமர்ந்திருந்தேன்.
எனக்கு லாட்டரி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தபோது, அது ஒரு கற்பனையானது என்று நினைத்தேன். நான் அவர்களிடம் செய்தியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதைப் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது, இன்றும் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டியிருக்கிறது. பெரிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சூப்பர் கார் ஒன்று வாங்க வேண்டும் என்பது எனது கனவு. அதோடு லாட்டரியில் பரிசு வென்றதை 7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். எனது பெற்றோரை அபுதாபிக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பது ஆசை. எனது பெற்றோருக்கு சிறிய சிறிய கனவு இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்றி அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
பரிசு பணத்தில் குறிப்பிட்ட பகுதியை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக கொடுக்க விரும்புகிறேன். தீபாவளி நேரத்தில் எனக்கு கிடைத்த இந்த பரிசு மிகவும் ஆசீர்வாதமானதாக கருதுகிறேன்''என்றார்.
தலா 50 தினார் வீதம் மொத்தம் 12 லாட்டரி டிக்கெட்களை அனில் குமார் வாங்கி இருந்தார். 23வது லாட்டரி குலுக்கலில் இந்த பரிசு அனில் குமாருக்கு கிடைத்துள்ளது. இதில் 100 மில்லியன் தினாரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.239 கோடியாகும். இந்த லாட்டரி ஆரம்பித்த பிறகு இந்த அளவுக்கு பரிசு விழுந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

















