செய்திகள் :

BB Tamil 9 Day 22: அலப்பறையை ஸ்டார்ட் செய்த பாரு; நாமினேஷன் தியாகம் செய்த பிரவீன்

post image

பாரு, கம்ருதீன் போன்ற நபர்கள் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கிடைக்காது என்பது உண்மை. அது வணிகக் காரணம்.  ஆனால் தார்மீகமான நோக்கில் பார்த்தால் இப்படிப்பட்ட அடாவடியான நபர்கள் ஒரு சமூகத்திற்கு மிக மிக மோசமான முன்னுதாரணமாக இருப்பார்கள். இவர்கள்தான் அதிக கவனம் பெறுவார்கள் என்றால் ‘நாமும் அடாவடியாக மாறினால் என்ன?’ என்று ஒரு நல்லவனுக்கும் தோன்றிவிடும்.  இந்த அடாவடி நபர்கள் சூழலை அப்படியாக மாற்றி நாசப்படுத்திவிடுவார்கள். 

BB Tamil 9 Day 22
BB Tamil 9 Day 22

துஷாரை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிய கம்ருதீனுக்கு திடீரென ஞானோதயமோ அல்லது எவிக்ஷன் அச்சமோ வந்ததுபோல. துஷாருடன் சமரசமாக பேசிக் கொண்டிருந்தார். ‘வளர்ப்பு’ என்பதற்கு அர்த்தம் தெரியாமல் போய்விட்டது. அது பெற்றோரை விமர்சிக்கும் சொற்பிரயோகம் என்று பாருவும் வினோத்தும் அட்வைஸ் செய்தார்களாம். கம்ருதீனுக்கு சுயமாக புத்தி இருக்கிறதா, இல்லையா? 


‘வீட்டு தல’ டாஸ்க். ஒருவரை முதுகில் கத்தியால் குத்தினால்தான் தலைவர் ஆக முடியும் என்று முந்தைய டாஸ்க்கில் அரசியல் பாடம் எடுத்து பிக் பாஸ், இந்த முறை ‘ஒருவரை கீழே தள்ளினால்தான் தலைவராக முடியும்’ என்று பாடம்எடுத்தார். கனி, பிரவீன், விக்ரம் ஆகிய மூவரும் கலந்துகொண்ட பிஸிக்கல் டாஸ்க்கில் கனியும் விக்ரமும் தாக்குப்பிடிக்க முடியாததால் பிரவீன் வெற்றி. (அறிவு சார்ந்த டாஸ்க் எதையும் பிக் பாஸ் வைக்கமாட்டார்போல!).

வீட்டு தலயாக மாறியவுடன் ஆர்மி ஆஃபிசராக மாறிவிட்டார் பிரவீன். ‘டிசிப்ளின் என்பதே இந்த சீசனில் இல்லை’ என்று பிக் பாஸூம் விசேவும் அடிக்கடி சொல்லி வந்ததால் அதை போகஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டார். எனவே விறைப்பாக நின்று அட்டென்ஷன், ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று பரேடு நடத்தினார். என்ன செய்து என்ன உபயோகம்? பாரு இருக்கிற வரை இந்த வீட்டில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் எந்நாளும் வரப்போவதில்லை. 
“எல்லாமே என் நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு சப்ளை கட் செய்வேன். அவமான வளையத்தில் நிற்க வேண்டியிருக்கும்” என்றெல்லாம் கம்பீரமாக பிரவீன் சொன்னாலும் யாரும் அதை சட்டை செய்யவில்லை. குறிப்பாக ஒழுங்குப்பிள்ளைபோல் குறுக்குக் கேள்விகள் கேட்டு இம்சை தந்தார் பாரு. 

BB TAMIL 9: DAY 22

ஐயா.. எனக்கு குக்கிங் மேல ஆசை வந்துடுச்சு... அது எனக்கு தெரபி மாதிரி உபயோகமாகும்” என்று விண்ணப்பித்தார் கம்ருதீன். (பார்ரா!) “ஓகே.. வெஜிடபிள் கட்டிங் மாதிரி வேலை பண்ணுங்க” என்று அனுமதி தந்தார் பிரவீன். அதிலும் கம்ருதீன் ஏதோ சந்தேகம் கேட்க, விசேவின் பாணியில் “உக்காருங்க கம்ருதீன்” என்றுசொல்லி அசத்தினார் பிரவீன். 

“எல்லோரும் டிசிப்ளினா இருங்க” என்று பிரவீன் சொன்னாலும் அது பாருவிற்கு மட்டும் அண்டர்லைன் செய்து சொன்னதுபோலவே இருந்தது. ஒரு கட்டத்தில் ‘இல்லடா’ என்று கம்ருதீன் இயல்பாக அழைக்க ‘call me தல’ என்று ஸ்டிரிக்ட் ஆபிசராக இருந்தார் பிரவீன்.

வீட்டு அணிகள் பிரிக்கப்பட்டன. கிச்சனில் கனி, வியன்னா. சுத்தம் செய்வதில் துஷார், அராரோ, கலை. பாத்ரூம் க்ளீனிங்கில் விக்ரம், கம்ருதீன். பாத்திரம் சுத்தம் செய்வதில் கெமி, பாரு. சூப்பர் வீட்டில் சுத்தம் செய்யும் நபர்களாக கம்ருதீன் மற்றும் கெமி இருப்பார்கள். 

“நம்ம வீட்டுக்குள்ள வந்த வேலை செய்யறவங்களை பாராட்டலாம்” என்று பாசிட்டிவ்வாக சூப்பர் வீடு முடிவெடுத்தது. “திவாகர்... நீங்க வேலை செய்யறவங்களை ரீல்ஸ் போட்டு பாராட்டுங்க. வேணாம்ன்னு சொல்லலை.  ஆனா ரீல்ஸ் போடறதை மட்டுமே வேலையா செய்யாதீங்க” என்று எஃப்ஜே சொல்ல “ஒரு நடிப்பு அரக்கனின் கலை தாகத்தை அணைபோட்டு கட்டுப்படுத்த நீ யார்?” என்று கொதித்தெழுந்தார் திவாகர். 

BB TAMIL 9: DAY 22

சூப்பர் வீட்டு அணியின் நபர், நாமினேஷன் ஃப்ரீ பாஸ் என்று இரண்டு சலுகைகளை ஏற்கெனவே பெற்றிருந்த பிரவீன், மூன்றாவதாக ‘வீட்டு தல’யாகவும் பிரமோஷன் அடைந்ததால் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று செக் மேட் வைத்தார் பிக் பாஸ். பிரவீன் தேர்ந்தெடுத்தது துணிச்சலான முடிவு. “நான் வீட்டு தலயா இருக்கேன்” என்ற தோ்வை செய்த அவர், சூப்பர் வீடு மற்றும் நாமிஷேன் ப்ரீ பாஸ் ஆகிய இரண்டையும் கனியக்காவிற்கு தியாகம் செய்தார். 

பிரவீன் அந்த முடிவை எடுத்ததும் தீ பற்றி எரியும் வாசனை வீடெங்கும் அடித்தது. யெஸ்.. பாருவின் வயிறு எரிந்ததுதான் அதற்கு காரணம். “மூணாவது முறையா நாமினேஷன் ஃப்ரீ பாஸ். கனியக்காவிற்கு வாழ்வுதான். வாழ்க” என்று சர்காஸ்டிக்காக பாராட்டினார் பாரு. 

சூப்பர் வீட்டிலிருந்து ஒருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒருவரும் இடம் மாற வேண்டும். பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருமனதாக கலை தோ்வு செய்யப்பட்டார். போலவே சூப்பர் வீட்டிலிருந்து சுபிக்ஷா முதன்முறையாக வெளியே வந்து பிக் பாஸ் வீட்டில் ஐக்கியமானார். 

‘தான் என்ன செய்யறோம்ன்னு தெரிஞ்சேதான் பாரு பண்றாங்க.. ஸ்கிரீன் டைமை அதிகம் எடுக்கறாங்க. அப்படி பண்ணாதான் ஃபோகஸ் அவங்க மேல போகும்ன்னு அவங்களுக்கு நல்லா தெரியுது. நாம அதை பிரேக் பண்ணனும்” என்று விக்ரம் ஏற்கெனவே பாருவின் ஸ்ட்ராட்டஜியை டிகோட் செய்தார். ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் எதுவும் செய்யவில்லை. 

விக்ரம் சொன்னபடியே முதல் நாளிலேயே தன் அலப்பறையை ஆரம்பித்து விட்டார் பாரு. கனியக்காவின் துணிகளை அடுக்கி கொண்டு வந்து டோர் டெலிவரி செய்ய வேண்டும். ‘பர்சனல் வேலைகளையெல்லாம் என்னால் செய்ய முடியாது’ என்று முரண்டு பிடித்த பாரு, பிறகு அரைமனதாக அதை ஒப்புக் கொண்டு துணிகளை கொண்டு வந்து சூப்பர் வீட்டின் வாசலிலேயே வைத்து விட்டார். அதான் டோர் டெலிவரியாம். 

இத்தனைக்கும் கனி அந்தத் துணிகளை கை நீட்டி வாங்க தயாராக நின்றிருந்தார். தாங்க்ஸ் என்று சொல்லவும் உத்தேசித்திருந்தார். ஆனால் பாருவிற்கு கன்டென்ட் வேண்டுமே? கனியின் மீது வயிற்றொிச்சல் வேறு. எனவே இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ‘துணியை கீழேதான் வைக்க முடியும். கையில் தர முடியாது” என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்தார். 


ஆர்மி கேப்டன் மாதிரி விறைப்பாக பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரவீனுக்கு முதல் பஞ்சாயத்தே ரணகளமாக அமைந்தது. “கைல கொடுக்கறதுதான் ஈஸி. கீழே வைக்கறது கஷ்டம்” என்று பிரவீன் சமாதானம் செய்ய முயற்சித்தாலும், பாருவிடம் அது எடுபடுமா என்ன?!  ‘யப்பா.. சாமி.. தலை பொறுப்பு ரொம்ப கஷ்டம்தான் போல’ என்று சபரியும் சுபிக்ஷாவும் இதைப் பார்த்து ஜொ்க் ஆனார்கள். பாரு செய்த அலப்பறை அப்படி. 

“நடக்கற இடத்துல துணிகளை கீழே வெச்சது அவமரியாதையா எனக்கு தெரியுது. பாரு மன்னிப்பு கேட்கணும்” என்று கனி சொல்ல “அதெல்லாம் ஸாரி கேட்க முடியாது” என்று கெத்தாக பிடிவாதம் பிடித்தார் கனி. 

சமையல் வேலை ஆரம்பிக்காவிட்டாலும் கூட இந்தப் பஞ்சாயத்து மட்டும் இழுபறியாக சென்று கொண்டே இருந்தது. “நான் அஹிம்சை முறையில் கீழே உக்காந்து போராடப் போறேன். மன்னிப்பு வேணும்” என்று கனி கீழே அமர, ‘நானும் அஹிம்சாவாதிதான். எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி பாருவும் பக்கத்திலேயே அமர்ந்து விட்டார். (யாரு கிட்ட!).

BB TAMIL 9: DAY 22

“இப்ப பார்த்தீங்கன்னா.. பிரியாணி ஆர்டர் பண்ணா.. அவங்க கையிலதான கொண்டு வந்து தருவாங்க.. வாசல்லயா வெச்சுட்டு போவாங்க?” என்று வினோத் லாஜிக்கலாக சொன்னாலும் பாரு அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. “மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என்ன வேணாலும் பண்ணிக்கங்க” என்று புது தலயை வறுத்தெடுத்தார். பிரவீன் அருகே வந்து பேச “என்னை டச் பண்ண வராதீங்க” என்று வேறு ஆயுதத்தை எடுக்கவும் பாரு தயங்கவில்லை.  “உங்க சண்டைல நான் கொடுத்து ஐநூறு ரூபாயை மறந்துடாதீங்க’ காமெடி மாதிரி “சோறு வடிக்க மளிகை சாமான் எதுவுமே இல்ல. அதை மொதல்ல பாருங்க” என்று இடையில் குரல் தந்தார் வியன்னா. 


இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட பேச்சு வார்த்தை தொடர்ந்தாலும் கூட இந்தப் பஞ்சாயத்து முடியவில்லை. “மன்னிப்பு கேட்காதவரை நான் சாப்பிடப் போவதில்லை’ என்று அஹிம்சா முறையின் உச்சக்கட்ட ஆயுதத்தை எடுத்தார் கனி. “சாப்பாடை வெச்சு விளையாடறதே.. இவங்களுக்கு பொழப்பா போச்சு.. இப்ப என்ன மன்னிப்புதானே..வெச்சுக்கங்க.. ராஜமாதா” என்று கிண்டலாக மன்னிப்பு கேட்டார் பார்வதி. “என்னை ராஜமாதான்னு கூப்பிடாதீங்க” என்று டென்ஷன் ஆனார் கனி. 

நாமினேஷன் சடங்கு துவங்கியது. பிரவீன், சுபிக்ஷா, கனி, எஃப்ஜே மற்றும் சபரி என்று ஐந்து நபர்களையும் நாமினேட் செய்ய முடியாது. எனில் மிச்சமுள்ளவர்களில் யார் வீட்டாரை நிறைய வெறுப்பேற்றியவர்கள்? யெஸ்.. பாருவிற்கும் கம்ருதீனுக்கும் சரமாரியாக வாக்குகள் குத்தப்பட்டன.  கூடவே வினோத்திற்கும் கொஞ்சம் தர்மஅடி விழுந்தது. 

“சுபிக்ஷா.. நீங்க யாரைக் காப்பாத்தப் போறீங்க?” என்று பிக் பாஸ் கேட்க, எதிர்பார்த்தபடியே வியன்னாவைத் தேர்ந்தெடுத்தார் சுபிக்ஷா. 

ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பாரு (7), கம்ருதீன் (10), வினோத் (5), அரோரா (3), மற்றும் கலை (3). 

BB TAMIL 9: DAY 22

“என்ன கம்ருதீனு. பத்து பேர் குத்தியிருக்காங்க.. ரெக்கார்ட் பண்ணிட்ட போ, என்னை யாரு குத்தியிருப்பாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்” என்ற பாரு ஏறத்தாழ சரியாகவே யூகித்துவிட்டார். (கொஞ்ச நஞ்ச பேரு கிட்டயா ஒரண்டை இழுத்திருக்கோம்.. ஊரு முழுக்க இழுத்து வெச்சிருக்கோம்!). 

நாமினேஷன் காரணங்களை பொதுவில் சொன்னார் பிக் பாஸ். மறைமுகமாக சொல்கிறாராம். அதற்கு நேரடியாகவே சொல்லியிருக்கலாம். ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற மாதிரியே இருந்தது. ‘பாருவால் வீட்டின் அமைதி கெடுகிறது’ என்று சொல்லப்பட்ட காரணத்திற்கு “வீடு அமைதியா இருக்க இவங்க என்ன சுற்றுலாவா வந்திருக்காங்க.. இது ரத்த பூமிடா” என்று தனிமையில் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. 

காலையில் ஆடை குறித்து பெரிய பஞ்சாயத்து நிகழ்ந்ததால், அதைப் பிடுங்குவதற்கு பிக் பாஸ் பிளான் செய்து விட்டாரோ, என்னமோ. 

“நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததின் நோக்கமே உங்களின் அடையாளத்தைக் காண்பிப்பதற்குத்தான். உங்க உடைகள், காலணி, உபகரணங்கள், மேக்கப் பொருட்கள்.. எல்லாத்தையும் நான் எடுத்துக்கப் போறேன். அதையெல்லாம் சூட்கேஸ்ல வெச்சுடுங்க” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் பதறினார்கள். “டூத் பிரஷ், பேஸ்ட், சோப் உட்பட” என்று பிக் பாஸ் சொல்ல ‘அய்யய்யோ’ என்று கூப்பாடு கேட்டது. பிக் பாஸ் சற்று கருணையுடன் ‘உள்ளாடைகள் தவிர’ என்று சொல்லி ஆறுதல் தந்தார். அவரே யூனிபார்ம் தருவாராம். 

BB TAMIL 9: DAY 22

“ஹய்யா.. ஜாலி. பல்லு வௌக்கத் தேவையில்ல. குளிக்கத் தேவையில்ல’ என்று இதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு உற்சாகமானார் பார்வதி. ஆனால் அது ஒரு பாவனைதான். ஒப்பனையில்லாமல் இவர்களை பார்வயைாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அனைவருக்கும் பவுன்சர்கள் மாதிரி கருப்பு நிற யூனிபார்ம் வந்தது. இழந்த ஆடைகளுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செய்ய எபிசோட் நிறைவிற்கு வந்தது. 

BB Tamil 9: "Unwanted Success-னு எனக்கு பீல் ஆகுது" - கம்ருதீன் குறித்து விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, ... மேலும் பார்க்க

BB Tamil 9: "ஆமா பார்வதி ஆர்மி கேம்ப் மாதிரி தான் அணியை வழிநடத்தப்போறேன்"- காட்டமான பிரவீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, ... மேலும் பார்க்க

BB Tamil 9: 'என்ன மன்னிச்சுடுங்க' - கனியிடம் மன்னிப்பு கேட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.27) நாளுக்கான முதல் இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 21: ‘கம்ருதீன், உக்காருங்க’ சலித்துக் கொண்ட விசே; வசமாக சிக்கிய பாரு - கம்மு கூட்டணி

‘கம்ருதீன்.. உக்காருங்க’ - இந்த வசனத்தை இந்த சீசனில் விஜய்சேதுபதி எத்தனை முறை சொல்லியிருப்பார். இப்படி ஒரு க்விஸ் கேள்வியே வைத்து விடலாம். பேசாமல் கம்ருதீன் பெயரை ‘கம்முனுருங்கதீன்’ என்று மாற்றி வைத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "திரும்ப திரும்ப என்னையவே மன்னிப்பு கேட்க சொல்றாங்க" - விஜே பார்வதி, கனி மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.27) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவ... மேலும் பார்க்க