பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்...
BB Tamil 9: "திரும்ப திரும்ப என்னையவே மன்னிப்பு கேட்க சொல்றாங்க" - விஜே பார்வதி, கனி மோதல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.27) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

இதில் நேற்று ஆதிரை வெளியேற்றப்பட்டிருக்கிறார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி செல்லயிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் எப்போதும் மோதிக்கொள்ளும் கனி - விஜே பார்வதி இருவரும் மோதிக்கொள்கின்றனர்.
டிரஸ்ஸைக் கொடுக்கும் விஷயத்தில் இருவருக்கும் சண்டை நடக்கிறது.

"ஹேய், சும்மா எதுக்கெடுத்தாலும்... திரும்ப திரும்ப என்னையவே மன்னிப்பு கேட்க சொல்றாங்க" என பார்வதி கத்த, "தப்பு பண்றவுங்க தைரியமா இருக்கும்போது, நான் நியாயமா ஒரு விஷயம் பண்ணிருக்கேன். என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என கனி திரு வாதம் செய்கிறார்.

















