சினேகன் தந்தை மறைவு: "எனது தம்பியின் தந்தை மறைவு செய்தி கேட்டு துயருற்றேன்" - கம...
இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் இன, நிற வெறிக் காரணமாக தாக்கப்படுகிறார்கள். சமீப காலமாக இந்தத் தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதன் ஒரு உதாரணமாக இந்தியாவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை தேடிவருகிறது. மேலும், சந்தேக நபரின் சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டு, குற்றவாளி குறித்த தகவல்களை சேகரிக்க இங்கிலாந்தின் பொதுமக்களிடம் உதவிகோரியிருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்துவரும் மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் கண்காணிப்பாளர் (DS) ரோனன் டைரர், ``இது ஒரு இளம் பெண் மீதான பயங்கரமான தாக்குதல் தொடர்பான வழக்கு. குற்றவாளியை கைது செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
குற்றவாளியை கைது செய்வதற்கான அதிகாரிகள் குழுக்கள் எங்களிடம் உள்ளன. தற்போது பல கட்ட விசாரணைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















