செய்திகள் :

டெல்லி: அந்தரங்க வீடியோவை அழிக்க மறுத்த லிவ் இன் பார்ட்னர்; மாஜி காதலன் துணையோடு எரித்து கொன்ற பெண்

post image

டெல்லியில் உள்ள காந்தி விகார் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் ரமேஷ் என்பவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஆரம்பத்தில் வீட்டிலிருந்த ஏ.சி. வெடித்து தீவிபத்து ஏற்பட்டு ரமேஷ் இறந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். 32 வயதாகும் ரமேஷ் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்தார். விசாரணையில் அவர் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிடம் இருந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணிக்கு இரண்டு பேர் முகத்தை மூடிக்கொண்டு அக்கட்டிடத்திற்குள் செல்வது பதிவாகி இருந்தது.

சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியில் சென்றபோது ஒரு பெண்ணும் அவர்களுடன் வெளியில் சென்றார். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ரமேஷ் வசித்த வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது. சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகில் அப்பெண்ணின் போன் இருந்தது. அவரது போன் சிக்னலை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது.

கைது
கைது

இதையடுத்து டெல்லி போலீஸார் மொரதாபாத் பகுதியில் ரெய்டு நடத்தி அப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் விசாரணை நடத்தி அப்பெண்ணின் முன்னாள் காதலன் உட்பட மேலும் இரண்டு பேரைக் கைது செய்தனர்.

அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ரமேஷ் அப்பெண்ணை அந்தரங்கமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை அழிக்க மறுத்ததாகவும், இது குறித்து முன்னாள் காதலனுடன் பேசியபோது ரமேஷைக் கொலை செய்ய முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பேரும் அதிகாலை வீட்டிற்குள் நுழைந்து ரமேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் ரமேஷ் உடல் மீது நெய், ஆயில் மற்றும் மதுபானத்தை ஊற்றி தீவைத்துள்ளனர். அதோடு வீட்டிலிருந்த சிலிண்டரையும் திறந்துவைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தனர்.

இதனால் தீப்பிடித்துக்கொண்டது. அவர்கள் தப்பிச்சென்றபோது லேப்டாப், ஹார்டு டிஸ்க் மற்றும் பொருட்களை எடுத்துச்சென்று இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. ரமேஷுடன் தங்கி இருந்த பெண் பி.எஸ்.சி. படித்து வந்தார்.

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள... மேலும் பார்க்க

Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர். போலீஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய... மேலும் பார்க்க

குமரி: 14 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; இன்ஸ்பெக்டர் லஞ்ச வாங்கி சிக்கியதை தொடர்ந்து அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வழக்கில் இருந்து பெயரை ந... மேலும் பார்க்க

உயிரிழந்த பெண் டாக்டர்; SI செய்த வன்கொடுமை; காதலனின் பகீர் வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பால்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தன்னை சப் இன்ஸ்பெக்டர் கோபால் என்பவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று எழுதி வைத்துவிட்டு... மேலும் பார்க்க

சண்டையிட்டுச் சென்ற மனைவி; இரு குழந்தைகளைக் கொன்ற தந்தை - பதறிய போலீஸ்

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் சவான். நேற்று இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெளியூருக்கு பயணம் சென்று கொண்டிருந்தார். வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ ஒரு பிரச்னையில் தி... மேலும் பார்க்க